உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தசரா ஜம்புசவாரி மைசூரை தெறிக்க விடும் 22 - 68 வயதுடைய 14 யானைகள் மைசூரை தெறிக்க விடும் 14 யானைகள்

தசரா ஜம்புசவாரி மைசூரை தெறிக்க விடும் 22 - 68 வயதுடைய 14 யானைகள் மைசூரை தெறிக்க விடும் 14 யானைகள்

மைசூரு: மைசூரு தசரா விழாவின் பிரதான அடையாளமாக திகழும் யானைகளுக்கு பல சிறப்புகள் உள்ளன.மைசூரு தசரா விழா, இந்தாண்டு அக்டோபர் 3ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. இறுதி நாளான விஜயதசமி அன்று நடைபெறும் ஜம்புசவாரி ஊர்வலம் உலக பிரசித்தி பெற்றது.தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவியை யானை மீது அமர வைத்து, அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் வரை ஊர்வலமாக செல்லும் காட்சியை காண்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும், நம் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருவர்.அந்த வகையில், இந்தாண்டு தசரா விழாவில் 14 யானைகள் பங்கேற்கின்றன. முதல் கட்டமாக, ஒன்பது யானைகள், காட்டில் இருந்து, மைசூரு நகருக்கு நேற்று அழைத்து வரப்பட்டன. இன்று யானைகளுக்கு பூஜை செய்து, அரண்மனை வளாகத்திற்குள் அழைத்து செல்லப்படுகின்றன.தசரா விழாவில் பங்கேற்கும் 14 யானைகளின் சிறப்புகளை காண்போம்.23_Abhimanyuஅபிமன்யூ, 58 இந்த ஆண் யானை, 1970ல் குடகு மாவட்டம், ஹெப்பள்ளா வனப்பகுதியில் பிடிபட்டது. காட்டு யானைகளை பிடிப்பதற்கும், மற்ற யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிப்பதிலும் வல்லமை படைத்தது. இதுவரை, 140 - 150 யானைகளையும்; 40 - 50 புலிகளை பிடிப்பதற்கும் உதவியுள்ளது.கடந்த 2012 முதல் தசரா விழாவில் பங்கேற்கிறது. 2015 வரை ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, இசை குழு அமர்ந்து செல்லும் வண்டியை இழுத்து சென்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக தங்க அம்பாரியை சுமக்கும் மிக பெரிய பொறுப்பை நிர்வகித்து வருகிறது. இந்த யானை, 2.74 மீட்டர் உயரம் கொண்டது. மத்திக்கோடு யானைகள் முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் வசந்த்; வளர்ப்பாளர் ராஜு.23_Lakshmiலட்சுமி, 23தாய் யானையிடம் இருந்து பிரிந்த இந்த பெண் யானை, 2002ல் பண்டிப்பூர் வனப்பகுதியில் பிடிபட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக தசரா விழாவில் பங்கேற்கிறது. இந்த யானை, 2.32 மீட்டர் உயரம் கொண்டது. ராம்புரா முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் சந்திரா; வளர்ப்பாளர் கிருஷ்ணமூர்த்தி.23_Varalakshmiவரலட்சுமி, 68இந்த பெண் யானை, 1977ல் காகனகோட்டே வனப்பகுதியில் பிடிபட்டது. அம்பாரி சுமக்கும் யானைக்கு, கும்கி யானையாக ஒன்பது முறை தசரா விழாவில் பங்கேற்றுள்ளது. இந்த யானை, 2.36 மீட்டர் உயரம் கொண்டது. பீமனகட்டா முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் ரவி; வளர்ப்பாளர் லவா.23_Dananjeyaதனஞ்செயா, 44இந்த ஆண் யானை, 2013ல் ஹாசன் மாவட்டம், யசலுார் வனப்பகுதியில் பிடிபட்டது. காட்டு யானைகள், புலிகளை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக தசரா விழாவில் பங்கேற்கிறது. இந்த யானை, 2.80 மீட்டர் உயரம் கொண்டது. துபாரே முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் பாஸ்கர்; வளர்ப்பாளர் ராஜண்ணா.23_Mahendraமகேந்திரா, 41இந்த ஆண் யானை, 2018ல் ராம்நகர் வனப்பகுதியில் பிடிபட்டது. காட்டு யானைகள், புலிகள் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழாவில் அம்பாரியை சுமந்து பங்கேற்றது. இந்த யானை 2.75 மீட்டர் உயரம் கொண்டது. மத்திகோடு முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் ராஜண்ணா; வளர்ப்பாளர் மல்லிகார்ஜுனா.23_Bheemaபீமா, 24இந்த ஆண் யானை, 2000வது ஆண்டு, பீமனகட்டே வனப்பகுதியில் பிடிபட்டது. காட்டு யானைகள், புலிகள் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. 2017ல் தசரா ஊர்வலத்தில் பங்கேற்றது. 2022 முதல், அரண்மனையின் பட்டத்து யானையாக செயல்படுகிறது. இந்த யானை, 2.85 மீட்டர் உயரம் கொண்டது. மத்திக்கோடு முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் குண்டா; வளர்ப்பாளர் நஞ்சுண்டசாமி.23_Gopiகோபி, 42இந்த ஆண் யானை, 1993ல் காரேகொப்பா வனப்பகுதியில் பிடிபட்டது. 13 ஆண்டுகளாக தசரா விழாவில் பங்கேற்கிறது. 2015 முதல் அரண்மனையின் பட்டத்து யானையாக பூஜை போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 2.86 மீட்டர் உயரம் கொண்டது. துபாரே முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் நவீன்; வளர்ப்பாளர் சிவு.23_Sugreevaசுக்ரீவா, 42இந்த ஆண் யானை, 2016ல் குடகு மாவட்டம், குஷால்நகர் வனப்பகுதியில் பிடிபட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தசரா விழாவில் பங்கேற்கிறது. 2.77 மீட்டர் உயரம் கொண்டது. துபாரே முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் சங்கர்; வளர்ப்பாளர் அனில்.23_Prashanthபிரசாந்த், 51இந்த ஆண் யானை, 1993ல் காரேகொப்பா வனப்பகுதியில் பிடிபட்டது. காட்டு யானைகள், புலிகள் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக தசரா விழாவில் பங்கேற்கிறது. 3 மீட்டர் உயரம் கொண்டது. துபாரே முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் சின்னப்பா; வளர்ப்பாளர் சந்திரா.23_Kanjanகஞ்சன், 25இந்த ஆண் யானை, 2014ல் ஹாசன் மாவட்டம், யசலுார் வனப்பகுதியில் பிடிபட்டது. காட்டு யானைகள், புலிகள் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. கடந்தாண்டு முதல் தசரா விழாவில் பங்கேற்கிறது. இந்த யானை, 2.62 மீட்டர் உயரம் கொண்டது. துபாரே முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் விஜய்; வளர்ப்பாளர் கிரண்.23_Rohithரோஹித், 22இந்த ஆண் யானை, 2001ல் ஹெடியாலா வனப்பகுதியில், 6 மாத குட்டியாக இருக்கும் பிடிபட்டது. கடந்தாண்டு தசரா விழாவில் பங்கேற்றது. இந்த யானை, 2.70 மீட்டர் உயரம் கொண்டது. ராம்புரா முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் சையத் உஸ்மான்; வளர்ப்பாளர் மாது.23_Hiranyaஹிரண்யா, 47இந்த பெண் யானை, 2021ல் குடகு மாவட்டம், யானை மனே அறக்கட்டளையிடம் இருந்து வனத்துறை வாங்கியது. கடந்தாண்டு முதல் தசரா விழாவில் பங்கேற்கிறது. 2.50 மீட்டர் உயரம் கொண்டது. ராம்புரா முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் சபிஹுல்லா; வளர்ப்பாளர் மன்சூர்.22_Doddaharave Lakshmiதொட்டஹரவே லட்சுமி, 53இந்த பெண் யானை, மைசூரு மாவட்டம், ஹுன்சூர் வனப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் பிடிபட்டது. இந்த யானை, 2.52 மீட்டர் உயரம் கொண்டது. தொட்டஹரவே முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் ரவி; வளர்ப்பாளர் மஞ்சுநாத்.23_Ekalavyaஏகலைவா, 39இந்த ஆண் யானை, 2022ல் மூடிகெரே வனப்பகுதியில் பிடிபட்டது. வாகன சத்தம், பட்டாசு சத்தத்திற்கு அஞ்சாது. முதல் முறை தசரா விழாவில் பங்கேற்கிறது. இந்த யானை, 2.88 மீட்டர் உயரம் கொண்டது. முத்திகோடு முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் ஸ்ருஜன்; வளர்ப்பாளர் இதாயத்.இந்த ஆண் யானை, 2022ல் மூடிகெரே வனப்பகுதியில் பிடிபட்டது. வாகன சத்தம், பட்டாசு சத்தத்திற்கு அஞ்சாது. முதல் முறை தசரா விழாவில் பங்கேற்கிறது. இந்த யானை, 2.88 மீட்டர் உயரம் கொண்டது. முத்திகோடு முகாமில் வளர்க்கப்படுகிறது. இதன் பாகன் ஸ்ருஜன்; வளர்ப்பாளர் இதாயத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி