உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டஸ்ட் அலவன்ஸ்

டஸ்ட் அலவன்ஸ்

சயனைட்' மண் துாசி பரவுவதால், திடமாக உள்ளவர்களையும் பலவீனமாக்கி விடும். இருமல், சுவாச கோளாறு, கண் எரிச்சல் உட்பட பல்வேறு வியாதிகள் ஏற்படுகின்றன.குறிப்பாக ஆடி மாதத்தில் பலமான காற்று வீசுவதால் அனைவரின் வீடுகளிலும் இந்த துாசி மண் தஞ்சம் அடைகிறது. இதனால், நுரையீரல் பாதிப்பு ஏற்படும். கழிவுமண் துாசியால் சுவாச கோளாறு ஏற்படுவதை, தங்கவயல் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது ஜெகதீஸ்வரா உணர்ந்தார். துாசி பரவாமல் இருக்க சயனைட் மலை மீது, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கினார்.இதில் மாணவர்கள், பொதுநல ஆர்வலர்களை ஈடுபட வைத்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. தங்கவயல் பெமல் தொழிற்சாலையில் துாசி பரவுவதால், ஊழியர்களுக்கு 200 ரூபாய் வரை, 'டஸ்ட் அலவன்ஸ்' வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை