உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமையல் எண்ணெய் விலையை உயர்த்தக்கூடாது: மத்திய அரசு

சமையல் எண்ணெய் விலையை உயர்த்தக்கூடாது: மத்திய அரசு

புதுடில்லி, : நம் நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் 50 சதவீதத்துக்கும் கூடுதலாக இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.இந்நிலையில், உலகளவில் எண்ணெய் விதைகளின் சாகுபடி அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை சரிந்து, இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி மேலும் அதிகரித்தது. இது உள்நாட்டில் எண்ணெய் விதை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பாதிக்கும் என்பதால், அவர்களின் நலனைக் காக்கும் வகையில், மத்திய அரசு கடந்த வாரம் கச்சா பாமாயில், சூரிய காந்தி, சோயா ஆகியவற்றின் இறக்குமதி வரியை 20 சதவீதம் உயர்த்தியது. இந்நிலையில், இறக்குமதி வரி உயர்வை காரணம் காட்டி, சமையல் எண்ணெய் விலையை சுத்திகரிப்பு நிறுவனங்கள் உயர்த்தக்கூடாது என அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க, மத்திய உணவுத் துறை செயலர் சன்ஜீவ் சோப்ரா தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. இதன்பின், அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சுங்கவரி உயர்த்தப்படுவதற்கு முன்பே இறக்குமதி செய்யப்பட்டு கையிருப்பில் உள்ள, 30 லட்சம் டன் எண்ணெய், தாராளமாக அடுத்த 45 முதல் 50 நாட்களுக்கு போதுமானது. குறைந்த வரியில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் இருப்பு உள்ள வரை, விலையை உயர்த்தக்கூடாது என சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரும் இதை பின்பற்றுவதை உறுதி செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAAJ68
செப் 18, 2024 17:31

கோல்டு வின்னர் 113 ரூபாய் இருந்தது ஒரு லிட்டர் எப்போது 125 ரூபாய். நீங்கள் வரி போட்டுவிட்டு ஏற்றக்கூடாது என்றால் வியாபாரிகள் எப்படி ஒப்புக் கொள்வார்கள் அவர்கள் கையை விட்டு கட்டணமா மக்கள் தலையில் தான் விழுகிறது. நிர்வாகம் தெரியாத மத்திய அரசு .


ஆரூர் ரங்
செப் 18, 2024 15:19

பண்டிகைக் காலம் வந்து விட்டதால் எண்ணெய்க்கு கிராக்கி அதிகம். சூழ்நிலையைப் பயன்படுத்தி விலையைக் கூட்டுவது தவறு . அரசு எவ்வளவோ ஊக்கமும் மானியமும் அளித்தும் விவசாயிகள் எண்ணெய் வித்துக்களைப் பயிரிடத் தயங்கக் காரணம் எண்ணெய் இறக்குமதிதான். இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி ஏழை வாடிக்கையாளர்கள் தலையில்தான் விழும். அவர்கள் விவசாயிகளின் நலன் கருதி விலையுயர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்டுப்படியாகாதவர்கள் அரசு ரேஷனில் வழங்கும் பாமாயிலைப் பயன்படுத்தலாம்.


பாமரன்
செப் 18, 2024 10:06

அதென்னங்க எரிபொருள் கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு ரூல் மத்தவங்களுக்கு ஒரு ரூல்... எரிபொருள் துறைக்கு ஒரு அமைச்சர் வேறே... இதெல்லாம் கண்துடைப்பு.. முக்கிய உணவு எண்ணெய் நிறுவனமான அடேஷினிக்கு ஒரு சம்மிக்ஞய் என்றே இதை பார்க்க முடியுது... மக்களுக்கு வழக்கம் போல பிம்பிளிக்கி பிளாக்கிதான்...


T.sthivinayagam
செப் 18, 2024 04:26

சமையல் எண்ணெய் விலையை சுத்திகரிப்பு நிறுவனங்கள் உயர்த்தக்கூடாது என கூறுவது பாஜக அரசின் மங்காத்தா ஆட்டத்தையே காட்டுகிறது என மக்கள் கூறுகின்றனர்


Rajesh
செப் 18, 2024 04:21

ஒரு லிட்ரேருக்கு 13 ரூ விலை ஏற்றி 1 வாரம் ஆகுது . மத்திய அரசால் செய்திதான் வெளியிட முடியும் . வேறு ஒன்றும் செய்ய முடியாது.


தாமரை மலர்கிறது
செப் 18, 2024 01:22

உடல் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் பொருள் தான் எண்ணெய். அதன் விலை அதிகரித்தால் மக்கள் கம்மியாக உபயோகப்படுத்துவார்கள். இறக்குமதி வரியை அதிகரிப்பது நல்லது. இதனால் எந்த கேடும் இல்லை. அரசு விலை கட்டுப்பாடுகளை தனியாரிடம் விதிக்க கூடாது. இது போன்ற கம்முனிச கொள்கைகள் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.


அப்பாவி
செப் 18, 2024 00:51

மத்திய அரசு மட்டுமே உருவுவதற்கு அதிகாரம் கொண்டது. இப்பிடியே போனால், அதானிகள் நடத்தும் ஆயில் மில்களை மூடிட்டு போக வேண்டியதுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை