செம்பை பார்த்தசாரதி கோயிலில் ஏகாதசி உற்ஸவம் கொடியேற்றம்
பாலக்காடு:கேரள மாநிலம் பாலக்காடு செம்பை பார்த்த சாரதி கோயில் ஏகாதசி உற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் ஏகாதசி உற்ஸவம் நடக்கிறது. செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த விழா பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு உற்ஸவத்துக்கு நேற்று இரவு 7:00 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது. இதற்கு தந்திரி அண்டாடி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு தலைமை வகித்தார்.உற்ஸவத்தை முன்னிட்டு நடக்கும் சங்கீத உற்ஸவம் மார்ச் 8 முதல் 10ம் தேதி வரை நடக்கிறது. இதை பிரபல இசை கலைஞர் டி.வி., கோபாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார். விஜய் ஜேசுதாஸ் உட்பட இசைக்கலைஞர்கள் சங்கீத ஆராதனை நடத்துகின்றனர். மார்ச் 11ல் ஏகாதசி உற்ஸவம் நிறைவடைகிறது.