காரில் மாரடைப்பு முதியவர் மரணம்
குருகிராம்:டில்லி - -ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த போது, காரில் இருந்த 68 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.ராஜஸ்தான் மாநிலம் பிவாடியைச் சேர்ந்தவர் ராஜேந்தர் சிங்,68. நேற்று முன் தினம் காலை, ஒரு கூட்டத்தில் பங்கேற்க அம்பாலாவுக்கு காரில் சென்றார். பிலாஸ்பூர் அருகே மேம்பாலம் கட்டுவதால் ஏற்பட்டு இருந்த போக்குவரது நெரிசலில் அவர் கார் சிக்கியது. ராஜேந்திர சிங்குக்கு அப்போது மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் சீட்டிலேயே மரணம் அடைந்தார். உடற்கூறு ஆய்வுக்குப் பின், குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.