உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜிகா தொற்று முதியவர் பலி

ஜிகா தொற்று முதியவர் பலி

ஷிவமொகா: கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் நிலையில், ஷிவமொகாவில் ஜிகா தொற்று பரவியுள்ளது. முதியவர் ஒருவர் பலியானார்.கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கிறது. மருத்துவமனையில் சேரும் நோயாளிகள் எண்ணிக்கை ஏறுமுகமாகிறது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். ஹாவேரியில் ஒன்பது வயது சிறுமி திவ்யா, பெங்களூரில் 11 வயது சிறுவன் ககன் ஆகிய இருவரும், டெங்குவுக்கு பலியாகினர்.பெங்களூரிலும் டெங்கு வேகமாக பரவுகிறது. கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறுகிறது. தண்ணீர் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. இது டெங்கு பரவ காரணமாகிறது. எனவே வீட்டு முன் தண்ணீர் தேங்கியிருந்தால், 500 ரூபாய் அபராதம் விதிக்க பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.கண்ட, கண்ட இடங்களில் குப்பை கொட்டி இடத்தை அசுத்தமாக்கி, கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்க காரணமானவர்களுக்கு, அபராதம் விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதற்கிடையில் ஷிவமொகாவில் ஜிகா தொற்று பரவியுள்ளது. முதியவர் ஒருவர் உயிரிழந்தார். ஷிவமொகாவில் வசித்த 74 வயது முதியவர், உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டார். அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.பரிசோதனையில் அவருக்கு 'ஜிகா' வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியானது. 10 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர், நேற்று காலை உயிரிழந்தார்.இதுகுறித்து, மாவட்ட சுகாதார அதிகாரி நடராஜ் கூறுகையில், ''வெறும் ஜிகா தொற்றால், முதியவர் உயிரிழந்திருக்க முடியாது. அவர் உடல் உறுப்புகள் செயலிழப்பால் அவதிப்பட்டார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்