உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமணமான 2 மாதத்தில் மின் ஊழியர் தற்கொலை 

திருமணமான 2 மாதத்தில் மின் ஊழியர் தற்கொலை 

பேட்ராயனபுரா: திருமணமான இரண்டே மாதங்களில், மேம்பாலத்தில் இருந்து குதித்து, மின் துறை ஒப்பந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரு ஞானபாரதி சிக்கசொன்னேனஹள்ளியில் வசித்தவர் நவீன், 30. கர்நாடக அரசின் மின் துறையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.நேற்று காலை வீட்டில் இருந்து, ஸ்கூட்டரில் வேலைக்கு புறப்பட்டார். காலை 8:30 மணியளவில் நாயண்டஹள்ளி மேம்பாலத்திற்கு வந்தார். ஸ்கூட்டரை சாலையோரமாக நிறுத்தினார்.பின்னர் மேம்பாலத்தில் இருந்து, திடீரென கீழே குதித்தார். உயிருக்கு போராடியவரை பேட்ராயனபுரா போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார்.நவீன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ