உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடைத்தேர்தலை குறிவைத்து 30ல் வேலைவாய்ப்பு முகாம்

இடைத்தேர்தலை குறிவைத்து 30ல் வேலைவாய்ப்பு முகாம்

ராம்நகர் : இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் மக்களை கவர, சென்னபட்டணாவில், வரும் 30ம் தேதி அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.ராம்நகரின் சென்னபட்டணா தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட துணை முதல்வர் சிவகுமார் முடிவு செய்துள்ளார்.இந்த தொகுதி ம.ஜ.த., வசம் உள்ளது. இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைக்க வேண்டும் என்பது, மத்திய அமைச்சர் குமாரசாமியின் எண்ணம்.சென்னபட்டணாவில் வெற்றி பெற இப்போது இருந்தே காங்கிரசும், ம.ஜ.த.,வும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், மக்களை கவரும் வகையில் வரும் 30ம் தேதி, சென்னபட்டணாவில் பிரமாண்ட வேலை வாய்ப்பு முகாம் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் சிவகுமார் முன்நின்று நடத்துகிறார்.இம்முகாம் நடத்துவதை ம.ஜ.த., விமர்சித்துள்ளது. 'பெங்களூரு ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஆக சுரேஷ் இருந்தபோது, ஒரு வேலை வாய்ப்பு முகாம் கூட நடத்தவில்லை. இப்போது அரசியலுக்காக நாடகம் ஆடுகின்றனர்' என, அக்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை