உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாஜி காதலி வாகனத்துக்கு தீ; ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்

மாஜி காதலி வாகனத்துக்கு தீ; ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்

சி.கே.அச்சுக்கட்டு; காதலை இளம்பெண் கைவிட்டதால், அவரது பைக், குடும்பத்தினரின் இரண்டு கார்களுக்கு தீ வைத்த ரவுடி, அவரது கூட்டாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு, ஹனுமந்த நகரை சேர்ந்தவர் ராகுல், 25. இவரும், சி.கே.அச்சுக்கட்டின் 23 வயது பெண்ணும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ராகுலின் நடவடிக்கை பிடிக்காததால், அவரிடம் இருந்து இளம்பெண் விலக ஆரம்பித்தார். கடந்த மாதம் ராகுலை சந்தித்த காதலி, 'பிரேக் அப்' செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டு சென்றார்.ஆனாலும், இளம்பெண்ணை தினமும் பின்தொடர்ந்து சென்ற ராகுல், மீண்டும் காதலிக்கும்படி கூறினார். இதற்கு இளம்பெண் ஒப்புக்கொள்ளவில்லை. ஆத்திரம் அடைந்த ராகுல், 26, தனது கூட்டாளிகள் இருவருடன் இம்மாதம் 22ல் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்றார்.அங்கு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இளம்பெண்ணின் ஸ்கூட்டருக்கு தீ வைத்தார். பின், அங்கிருந்து புறப்பட்ட அவர்கள், இளம்பெண்ணின் குடும்பத்தினர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்த காவலாளியை தாக்கி விட்டு உள்ளே சென்றனர்.நேராக பார்க்கிங் சென்ற அவர்கள், இளம்பெண் குடும்பத்தினரின் இரண்டு கார்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். தகவல் அறிந்த சி.கே.அச்சுக்கட்டு, சுப்பிரமணியபுரா போலீசார் தனித்தனி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கோனனகுன்டே அருகில் ராகுலும், கூட்டாளிகளும் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கைது செய்ய சென்ற ஹனுமந்த நகர் போலீசாரை, ராகுல் தாக்க முயற்சித்தார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராகுலின் காதலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவருடன் இருந்த முனிராஜ், பிரவீன், வில்லியம்ஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ