உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொட்டும் மழையிலும் டாக்டர்கள் போராட்டம் மம்தாவுடன் பேச்சு நடத்தாதது குறித்து விளக்கம்

கொட்டும் மழையிலும் டாக்டர்கள் போராட்டம் மம்தாவுடன் பேச்சு நடத்தாதது குறித்து விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, மழையையும் பொருட்படுத்தாமல் பயிற்சி டாக்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், ஆக., 9ல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.இந்த சம்பவத்தில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. ஏற்கவில்லைஎனினும், கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், சுகாதார செயலர் என்.எஸ்.நிகாம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்; பெண் டாக்டருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கோல்கட்டாவின் சால்ட் லேக் என்ற பகுதியில், சுகாதார துறை தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வரும் பயிற்சி டாக்டர்களை, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் சந்தித்து போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினார். இதை அவர்கள் ஏற்கவில்லை.இந்நிலையில், சுகாதார துறை தலைமை அலுவலகம் முன்பு, தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்றும், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பரபரப்புஇது குறித்து பயிற்சி டாக்டர்கள் கூறுகையில், 'உயிரிழந்த எங்கள் தோழிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களில் பலருக்கு உடல்நிலை சரியில்லை.'எனினும், மக்களின் நலன் கருதி போராட்டத்தை தொடர்கிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்' என்றனர்.இதற்கிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி அபிஜித் மொண்டலை, சி.பி.ஐ., அதிகாரிகள் மருத்துவப் பரிசோதனைக்கு நேற்று காலை அழைத்துச் சென்ற போது, சி.பி.ஐ., அலுவலகம் முன், பயிற்சி டாக்டர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

'முதல்வர் தரப்பில் பதில் இல்லை'

பயிற்சி டாக்டர்கள் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் அக்யுப் கூறியதாவது: பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, பேச்சு நடத்த வரும்படி முதல்வரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையேற்று, முதல்வர் வீட்டுக்கு சென்றோம். எங்களுக்காக வீட்டு வாசலில் மம்தா காத்திருந்தார். உள்ளே வந்து டீ சாப்பிடும்படி அழைப்பு விடுத்தார். ஆனால், எங்கள் கோரிக்கையை ஏற்றால் தான் வருவோம் என உறுதியாக தெரிவித்து விட்டோம். பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட தயாராக இருந்தோம்.ஆனால், சந்திப்பின்போது என்னென்ன விஷயங்கள் பேச வேண்டும் என்ற குறிப்பை தரும்படி கேட்டோம். ஆனால், இதற்கு எந்த பதிலும் தராமல் முதல்வர் தரப்பில் தொடர்ந்து தாமதம் செய்யப்பட்டதால், மீண்டும் போராட்ட களத்துக்கு திரும்பி விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
செப் 16, 2024 08:49

டில்லி முதல்வர் செய்யும் செயலை இவரும் பின்பற்றுவாரா சும்மா சொன்னால் போதாது அவர் சொன்ன சொல்லை நடை முறையில் செய்து காட்டவேண்டும் ராஜினாமா கொடுக்க வேண்டும்


AMLA ASOKAN
செப் 16, 2024 08:17

இன்றைய இந்தியாவில் ஒரு நாளைக்கு அணைத்து மாநிலங்களிலும் சேர்த்து 100 கற்பழிப்புகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன . அவற்றில் சிலர் கொல்லப்படுகின்றனர் . போலீஸ் விசாரணைக்கு பயந்து பலர் அதனை மறைத்து விடுகின்றனர் . இச்சம்பவங்கள் மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றன . இந்நிலையில் கல்கத்தா மருத்துவர் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு விட்டார் . குற்றவாளியும் சிறைச்சாலையில் உறங்கிக்கொண்டிருக்கிறார் . இச்சம்பவத்தால் கலவரங்கள் உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளன . ஆனால் மற்ற மருத்துவர்கள் நீதிகேட்டு ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . உச்ச நீதிமன்ற அறிவுரைக்குப்பின்னும் அவர்கள் போராட்டத்தை கைவிடுவதாகவும் இல்லை . இதனால் லட்சக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் . 30க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர் . இவர்களது இன்றைய கோரிக்கை தங்களுக்கு பாதுகாப்பும் உள்கட்டமைப்பு வசதியும் தேவை என்பது தான் . அதுகுறித்து மாநில முதல் அமைச்சருடன் பேசி தங்களது கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு மற்றும் உத்தரவாதம் பெற்று மிக முக்கியமான மக்கள் சேவையை தொடர்வதை விட்டு, பேச்சுவார்த்தைக்கு நிபந்தனைகள் விதித்து போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது மக்கள் விரோத போக்கு. மக்கள் ஆதரவற்ற போராட்டமாக இது மாறிவருகிறது. மருத்துவர்கள் தங்களது நன்மதிப்பை இழந்து விடுவார்கள் ,பேச்சுவார்த்தை மூலம் முழு வெற்றி பெறுவது தான் புத்திசாலித்தனம். குற்றவாளிகளை தண்டிப்பது நீதிமன்றத்தின் வேலை. குற்றவாளிகளும் பல ஆண்டு நீதி விசாரணைக்கு பின்தான் தண்டிக்கப்படுகின்றனர் .போதிய சாட்சியமில்லை என்று பலர் விடுவிக்கபட்டும் உள்ளனர் . இது இந்திய சட்டம் கொடுக்கும் சலுகை .


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 09:04

மேற்படிப்பில் சாதிக்கவேண்டும் என்று திருமணத்தையே தவிர்த்த அப்பாவி பெண் மருத்துவர் உச்சபட்ச துன்பம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளார் ..... இதில் குற்றவாளிகளுக்குத் துணை போன, குற்றவாளிகளைக் காப்பாற்ற முனையும் அரக்கி அதிகாரத்தில் இருக்கிறார் .... மருத்துவர்களின் கோரிக்கையை அப்படியே ஏற்றால், அந்த அரக்கி தானே வலியப்போய் சரணடைவதற்குச் சமம் ..... அதனால் அரக்கி தயங்குகிறார் .....


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 10:43

அறிவாலய அடிமைகள் குறிப்பாக அறிவாலயத்தின் மூர்க்க கொத்தடிமைகள் அரக்கியை ஆதரிப்பது ஏன் ???? நாட்டைத் துண்டாட நினைப்பவர் என்பதாலா ????


Iyer
செப் 16, 2024 07:40

மேற்கு வங்கத்தை "மையமாக நிர்வகிக்கப்படுகிற" யூனியன் பிரதேசமாக அறிவித்து 10 வருடங்கள் தேர்தல் நடத்தாமல் - அங்கு கள்ளத்தனமாக குடியேறி வோட்டர் அட்டை பெற்ற ரோஹிங்கிய மற்றும் பங்களாதேஷிகளை கண்டுபிடித்து அவர்களை வோட்டு இழக்க செய்யவேண்டும். அடுத்த 10 வருடத்துக்குள் அவர்களை நாடு கடத்த வேண்டும்.


Kasimani Baskaran
செப் 16, 2024 05:41

இராஜினாமா செய்யத்தயார் என்று அறிவிப்பு மட்டும் வந்தது - ஆனால் மம்தா இராஜினாமா செய்வர் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.


முக்கிய வீடியோ