உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெயிலுக்கு விவசாயி பலி

வெயிலுக்கு விவசாயி பலி

ராய்ச்சூர்: வெப்பம் தாங்காமல், விவசாயி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.ராய்ச்சூரில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு அதிகரிக்கிறது. தற்போது 45 டிகிரி செல்ஷியஸை தாண்டியுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.ராய்ச்சூரின், ஜாலிபென்சி கிராமத்தில் வசித்தவர் விவசாயி ஹனுமந்து, 45. இவர் நேற்று காலை வயலுக்கு சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் வேலை பார்த்தார்.வெயிலில் வாடி வதங்கிய அவர், மாலை வீடு திரும்பினார். தண்ணீர் குடித்த அவர், மயங்கி விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தார். யரகேரா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை