உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 29 ஆண்டுக்கு பின் நடந்த திருவிழா; 35 பேர் மருத்துவமனையில் அனுமதி

29 ஆண்டுக்கு பின் நடந்த திருவிழா; 35 பேர் மருத்துவமனையில் அனுமதி

துமகூரு : துமகூரு அருகே, 29 ஆண்டுகளுக்கு பின் நடந்த திருவிழாவில் பங்கேற்ற 35க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.துமகூரு மாவட்டம், முதுகிரியின் சின்னேனஹள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, லக்கம்மா - கெம்பம்மா கோவில் திருவிழா, 29 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் துவங்கியது. ஆறு நாட்கள் இவ்விழா நடக்கும்.முதல் நாள் பண்டிகை முடிந்து அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் பலரும் வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக இருவர் மாவட்ட மருத்துவமனையிலும்; சிலர் மதுகிரி தாலுகா மருத்துவமனை, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கும் என 35க்கும் மேற்பட்டோர் அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில், லட்சுமம்மா, பெத்தண்ணா ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தகவல் அறிந்த அமைச்சர் ராஜண்ணா, மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார்.பின், அவர் கூறுகையில், ''மதுகிரியில் திருவிழா நடக்கும் போது மழையும் பெய்துள்ளது. மழை நீரா அல்லது உணவால் பாதிக்கப்பட்டனரா என்பது தெரியவில்லை. தற்போது லட்சுமம்மா, பெத்தண்ணா நலமாக உள்ளனர்,'' என்றார்.தகவல் அறிந்த சுகாதார துறை அதிகாரிகள், கிராமத்தில் முகாமிட்டு, மற்றவர்களை பரிசோதித்து வருகின்றனர். அங்கு தயாரிக்கப்பட்ட உணவு, தண்ணீரை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அறிக்கை கிடைத்த பின், இச்சம்பவத்துக்கான காரணம் தெரியவரும்.மிடிகேசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ