உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருவிழா பிரசாதம் 50 பேர் பாதிப்பு

திருவிழா பிரசாதம் 50 பேர் பாதிப்பு

பெலகாவி, - திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட, 50 க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டனர்.பெலகாவி சிக்கோடியின் கெரூரா கிராமத்தில் நேற்று காலை திருவிழா நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை முடிந்த பின், இவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பிரசாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில், பலருக்கும் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரசாத உணவு துாய்மையின்றி இருந்திருக்கலாம் என, கருதப்படுகிறது. தகவலறிந்த சுகாதார அதிகாரிகள் கிராமத்துக்கு வந்தனர். பக்தர்கள் சாப்பிட்ட பிரசாத மாதிரியை, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ