உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொடரும் பருவமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

தொடரும் பருவமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

பெங்களூரு; கர்நாடக கடலோரம், மலை மாவட்ட மக்களை, மழை விடாமல் வாட்டி வதைக்கிறது. பல இடங்களில் மண் சரிவால், மக்கள் அவதியில் சிக்கியுள்ளனர். 'மேலும் சில நாட்கள் மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.கர்நாடகாவின் உத்தரகன்னடா, தட்சிணகன்னடா, உடுப்பி, ஹாசன், குடகு, சிக்கமகளூரு, சிக்கபல்லாபூர், தாவணகெரே, மைசூரு உட்பட, பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை கொட்டுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bjrpjs8r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உத்தரகன்னடா, தட்சிணகன்னடா, ஹாசன், ஷிவமொகா, குடகு மாவட்டங்களில், இன்றும் கூட கன மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே அங்கன்வாடி முதல், பி.யு.சி., கல்லுாரிகள் வரை இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில், 'ரெட் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.உடுப்பியில் பரவலாக மழை பெய்கிறது. உடுப்பி புறநகரின், உத்தாவராவின் பொல்ஜேவில் உள்ள பாபநாசினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொல்ஜேவில் உள்ள வீடுகளில் நீர் புகுந்தது. மக்கள் வெளியே வர முடியாமல் தத்தளிக்கின்றனர்.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்வதால் மாண்டியா, ஸ்ரீரங்கபட்டணாவின், கே.ஆர்.எஸ்., அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரிக்கிறது.

மக்களுக்கு எச்சரிக்கை

அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்ற, காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர், காவிரி ஆற்றில் திறந்து விட வாய்ப்புள்ளது.'காவிரி நீர்ப்பாசன பகுதியின் தாழ்வான பகுதிகள், ஆற்றின் இரண்டு ஓரங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் சொத்துகள், கால்நடைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். அபாயமான பகுதிகளில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்' என, காவிர நீர்ப்பாசன கார்ப்பரேஷன் அறிவுறுத்தியுள்ளது.

தீவானது கோவில்

தட்சிணகன்னடா மாவட்டத்தில், பரவலாக மழை பெய்வதால, நேத்ராவதி, குமாராதாரா ஆறுகளில், வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது. பானி மங்களூரு உட்பட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்த மாவட்டத்தில் ஒரே வாரத்தில், வழக்கத்தை விட 29 செ.மீ., மழை அதிகமாக பெய்துள்ளது.மங்களூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கும் பண்ட்வாலின், ஏ.எம்.ஆர்., அணை மற்றும் தும்பே அணை நிரம்பியுள்ளது. தும்பே அணையில் இருந்து 30 மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.நேத்ராவதி, குமாரதாரா சங்கமிக்கும், உப்பினங்கடியின் சஹஸ்ர லிங்கேஸ்வரா கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோவில் தீவாக காட்சி அளிக்கிறது. பானி மங்களுரு அருகில், ஆலட்காவில் பல வீடுகள், தனியார் பள்ளி மைதானம், பாக்கு, தென்னை தோட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. புத்துாரின், கர்னுரு கோடிகத்தேவில், 40 ஆண்டுகள் பழமையான பாலம் பலவீனம் அடைந்துள்ளதால், கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

போக்குவரத்து நிறுத்தம்

ஷிராடிகாட்டில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், மங்களூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மடிகேரி, மைசூரு வழியாக மாற்று பாதையில் வாகனங்கள் செல்கின்றன. மடிகேரி, சம்பாஜி இடையே கர்தோஜி என்ற இடத்தில், மண் சரிவு ஏற்படும் அறிகுறிகள் தென்படுவதால், ஜூலை 18 முதல் 22 வரை இரவு 8:00 மணி முதல், காலை 6:00 மணி வரை, போக்குவரத்தை தடை செய்து, குடகு மாவட்ட கலெக்டர் வெங்கட் ராஜா உத்தரவிட்டுள்ளார். ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை வாகனங்களுக்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 20, 2024 18:21

ஆனால் எங்கள் சிக்கநாயக்கனஹள்ளி , குநீகள் பகுதியில் ராகி பயிரிட உழவு கூட ஓட்டமுடியாத நிலை , மழையை நம்பி விவசாயிகள் காத்துள்ளனர் , சிறு தூறல் மட்டுமே வந்துள்ளது வயிற்றை கலக்குகிறது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை