| ADDED : ஜூன் 22, 2024 01:37 AM
டாப்ரி: டேட்டிங் செயலிகளில் பெண்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் வீடுகளில் கொள்ளையடித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மே 31ம் தேதி, தன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, டாப்ரி காவல் நிலையத்தில் 35 வயது பெண் புகார் அளித்தார். டேட்டிங் செயலி வாயிலாக அறிமுகமான இருவர், தன்னை கட்டிப்போட்டு, தங்க நகைகள், மொபைல் போன், 5,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக புகாரில் அவர் கூறியிருந்தார்.இதையடுத்து டில்லியில் இப்படி ஒரு கொள்ளைக்கும்பல் சுற்றி வருவது வெளிச்சத்துக்கு வந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடத்துவங்கினர்.மோகன் கார்டன் பகுதியைச் சேர்ந்த விஜய் குமார் கமல், 28, ராகுல், 35, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இதேபோன்று ரோகினியை சேர்ந்த ஒரு பெண்ணையும் கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.போலி எண்ணுடன் பயன்படுத்தி வந்த கார், திருட்டு மொபைல் போன்கள், ஸ்கூட்டர், தங்க நகைகள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், தப்ரி, துவாரகா வடக்கு டில்லி, தெற்கு ரோகினி, வடக்கு ரோகினி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் கைவரிசையை காட்டியது தெரிய வந்துள்ளது.இதேபோன்று மேலும் பலரிடம் கொள்ளையடித்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.