உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிப்ஸ் பாக்கெட்டில் தவளை

சிப்ஸ் பாக்கெட்டில் தவளை

குஜராத்தின் புஷ்கர் தாம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்மின் படேல் என்பவர், நேற்று முன்தினம் மாலை அருகிலுள்ள கடையில் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.அந்தப் பாக்கெட்டை பிரித்து சாப்பிட்ட போது, இறந்த நிலையில் தவளை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறையில் அவர் புகார் அளித்தார்.இதன்படி, அந்த சிப்ஸ் பாக்கெட்டை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சிதைந்த நிலையில் தவளை இருப்பதை உறுதி செய்தனர்.மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தலின்படி, விசாரணை நடத்த சிப்ஸ் பாக்கெட்டுகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி