உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 20 பசுக்களை ஆற்றில் தள்ளிய கும்பல் கைது

20 பசுக்களை ஆற்றில் தள்ளிய கும்பல் கைது

சத்னா, மத்திய பிரதேசத்தில் சத்னா மாவட்டத்தின் நாகோத் பகுதி அருகே, 15 - 20 பசுக்களை கும்பல் ஒன்று ஆற்றில் அடுத்தடுத்து தள்ளி கொடூரமாக கொன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது, நாகோட் பகுதியைச் சேர்ந்த பேட்டா பாக்ரி, ரவி பாக்ரி, ராம்பால் சவுத்ரி, ராஜ்லு சவுத்ரி ஆகியோர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அவர்களிடம் 50க்கும் மேற்பட்ட பசுக்கள் இருந்ததாகவும், இதில், 15 முதல் 20 பசுக்கள் கொல்லப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.விசாரணைக்கு பின், அவர்களிடம் உள்ள மற்ற பசுக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி