உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெகா திருமணம், சீர்வரிசை என மோசடி: கடைசி நிமிடத்தில் கம்பி நீட்டிய கும்பல்

மெகா திருமணம், சீர்வரிசை என மோசடி: கடைசி நிமிடத்தில் கம்பி நீட்டிய கும்பல்

ராஜ்கோட்: மெகா திருமணம், இலவச சீர்வரிசை எனக் கூறி, திருமண வீட்டாரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து, கடைசி நிமிடத்தில் தலைமறைவான கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மெகா திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்து, சுமார் 100 ஜோடிகளுக்கு, பிரமாண்டமாக திருமணம் நடத்தித் தருவதாக ஒரு கும்பல் விளம்பரம் செய்தது.

அதிர்ச்சி

விளம்பரத்தை பார்த்து வந்த ஒவ்வொரு மணமகன், மணமகள் வீட்டாரிடமும் ஆயிரக்கணக்கில் பணத்தை வசூலித்ததுடன், சீர்வரிசை பொருட்கள், தங்கம், வரதட்சணை, மணமக்களுக்கு பரிசுகள் தருவதாக அந்த கும்பல் உறுதி அளித்தது. ராஜ்கோட் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணத்தை கட்டியதுடன், நேற்று திருமணத்துக்காக தங்கள் உறவினர்களையும் அழைத்து வந்தனர். திருமண கனவுகளுடன் இளம் மணமக்களும் வந்து சேர்ந்தபோது, விழாவுக்கான ஏற்பாடுகள் எதுவுமே செய்யப்படவில்லை என தெரிந்து, அதிர்ச்சியடைந்தனர். விழா ஏற்பாட்டாளர்களின் மொபைல் போன்களுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.மெகா திருமண விழா, மெகா குழப்ப விழாவாக மாறியதைப் பார்த்ததும், திருமணத்தை நடத்தி வைக்க வந்திருந்த புரோகிதர்கள் திரும்பிச் சென்றனர். நன்றாக ஏமாற்றப்பட்டதை அறிந்த திருமண கோஷ்டியினரில் சிலர், மனதை திடப்படுத்திக்கொண்டு, அருகில் உள்ள கோவில்களில் எளிமையாக திருமணத்தை முடித்துக் கொண்டனர்.

விசாரணை

இதற்கிடையே, தகவலறிந்து வந்த போலீசார், அங்கிருந்த திருமண வீட்டாரை அமைதிப்படுத்தி விசாரணை நடத்தினர். மேலும், போலீசாரின் ஏற்பாட்டில் ஆறு ஜோடிகளுக்கு அந்த இடத்திலேயே திருமணம் நடைபெற்றது. சிலர், திருமணம் முடிக்காமலேயே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்டையில், மெகா திருமணம் எனக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Karthik
பிப் 23, 2025 15:13

பேராசை பெருநஷ்டம்.. ஆனாலும் என் மனதில் வருத்தம்


ராம்பட்டேல்
பிப் 23, 2025 12:56

ஒருவேளை சௌராஷ்டிர சங்கம ஆளுங்களா இருக்குமோ? ரயிலெல்லாம் உட்டாங்களே.


அப்பாவி
பிப் 23, 2025 12:54

குஜராத்தைப் பாருங்கள் எல்லாத்துறைகளிலும் நம்பர் ஒன்னாக மின்னுதுன்னு நேத்திக்கி ஜீ பேசுனதா செய்தி போட்டிருந்தாக கோவால். இந்நேரமந்த கும்பல் அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆயிருக்கும் கோவால்


panneer selvam
பிப் 23, 2025 11:48

Great idea , let us implement soon in Tamil Nadu who could be trapped easily due to prevailing Freebie culture


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2025 09:48

திராவிட மாடலை விடத் திறமையானவர்களும் உலகில் இருக்கிறார்களே ?


ramesh
பிப் 23, 2025 10:55

நடேசா இது நடந்தது நீங்கள் ஆளும் குஜராத்தில் தான். முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை அகற்றி விட்டு மற்றவர்களை பற்றி பேசுங்கள்


Manikandan R
பிப் 23, 2025 11:19

மிக சரியாக சொன்னிர்கள் திருட்டு திமுக போல, காசு வாங்கி ஓட்டு போட்ட மக்களும் திருடர்கள்


P Vijai Anand
பிப் 23, 2025 11:47

நடேசா இது நடந்தது நீங்கள் ஆளும் குஜராத்தில் தான். முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை அகற்றி விட்டு மற்றவர்களை பற்றி பேசுங்கள்


RAAJ68
பிப் 23, 2025 07:37

ஏமாறுவதற்கு முன்பே போலீஸிடம் தகவல் சொல்லி விசாரிக்க சொல்ல வேண்டும்.


Yes your honor
பிப் 23, 2025 11:26

தமிழ்நாடாக இருந்திருந்தால் ஏமாற்றுபவர்கள் முதலிலேயே போலிஸுக்கு சொல்லி அனுமதி வாங்கிவிட்டு பிறகு செயல்படுத்துவார்கள். நாளை பிரச்சனை என்றவுடன், ஏமாற்றியவர்கள் நல்லவர்கள் என்று கூறி, புகார் கொடுக்கவரும் ஏமாந்தவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். நம் விதி, நாம் போட்ட ஓட்டின் மகிமை இது, அனுபவிப்போம்.


rajan_subramanian manian
பிப் 23, 2025 07:04

யாருக்கு தெரியும்? நமது திராவிட பாசறையில் ஏதாவது பயிற்சி பெற்று முதல் வகுப்பில் பாஸ் செய்த ஆட்களாக இருக்கலாம்.


amuthan
பிப் 23, 2025 06:33

நல்ல வேளை. தமிழ் நாடாக இருந்தால் திராவிட மாடல் என்று சிலர் குதிப்பார்கள்


rasaa
பிப் 23, 2025 08:01

யார் கண்டது? அந்த கும்பலில் இவர்களும் இருந்திருப்பார்கள்


நிக்கோல்தாம்சன்
பிப் 23, 2025 08:19

இது திராவிட மாடல்தானே? ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 4 லட்சம் கோடி கடன் , இப்போ 9 லட்சம் கோடி கடன் , லிங்க் பண்ணி பாருங்க அமுதன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை