உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டுத்தோட்டத்தில் கஞ்சா செடிகள்; வீடியோவால் சிக்கிய பெங்களூரு தம்பதி!

வீட்டுத்தோட்டத்தில் கஞ்சா செடிகள்; வீடியோவால் சிக்கிய பெங்களூரு தம்பதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருந்த போட்டோ, வீடியோவை இணையத்தில் வெளியிட்ட பெங்களூரு தம்பதி போலிசில் சிக்கினர்.பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள எம்.எஸ்.ஆர்., நகரில் சாகர் குருங்,37, மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி வசித்து வந்தனர். சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாம்ச்சியை சேர்ந்த இவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு பெங்களூருக்கு இடம் பெயர்ந்தனர். சாகர் குருங் ஹோட்டல் ஒன்று நடத்தி வருகிறார். அவரது மனைவி எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவருக்கு வீட்டில் இருப்பதற்கு போர் அடித்துள்ளது. இவர் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு ஆக்டிவாக இருக்க முடிவு செய்தார். அவர் தனது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ரீல்ஸ் போட்டு வந்தார். காலப்போக்கில், அவர் தனது வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் அவருக்கு பிடிப்பதையும் வீடியோ வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அவர் வீட்டு தோட்டத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டு சிக்கலில் மாட்டியுள்ளார்.வீட்டில் தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவது அவர் வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்தது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவது போலீசார் கவனத்திற்கு சென்றது. உடனடியாக போலீசார் தம்பதியை கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

தகவல் கிடைத்ததும், நாங்கள் தம்பதியின் வீட்டில் சோதனை செய்தோம். ஆரம்பத்தில், கஞ்சா செடி குறித்த எங்கள் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. நாங்கள் ஆய்வு செய்ததில் இரண்டு தொட்டிகளில் இருந்து செடிகள் பிடுங்கப்பட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்தோம். விசாரித்ததில், கஞ்சா வளர்த்ததை ஒப்புக்கொண்ட தம்பதியினர், 54 கிராம் எடையுள்ள செடிகளை வீசிய குப்பைத் தொட்டியைக் காட்டினார்கள். நாங்கள் அவற்றைக் கைப்பற்றினோம்.தம்பதியினர் தங்கள் வீட்டு வாசலில் போலீசாரைப் பார்த்து, கஞ்சா செடிகளை அவசரமாக அகற்றி, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனை செய்யும் நோக்கத்தில் தம்பதியினர் கஞ்சா செடி வளர்த்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். வீடியோவைப் பதிவேற்றப் பயன்படுத்திய மொபைல் போனை போலீசார் கைப்பற்றி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Natchimuthu Chithiraisamy
நவ 15, 2024 11:11

சிக்கிமில் சாதாரணம் தமிழ்நாட்டில் கடும்தண்டனை. திருப்பூரில் வசிக்கும் பெங்காலிகள் சஞ்சச்செடி வளர்க்கிறார்கள் அது தெரிந்து பிடுங்கி எறிந்தால் தண்டனையா ?


SUBRAMANIAN P
நவ 13, 2024 14:46

என்ன.... இப்படி கெளம்பிட்டாங்ய...


அப்பாவி
நவ 11, 2024 07:51

அதிக போதையில் இருக்கிற மாதிரி தெரியறாரு.


Ramesh Sargam
நவ 10, 2024 13:31

வறட்டு விளம்பரத்துக்காக இப்படி தேவை இல்லாததை செய்து மாட்டிக்கொண்டார்கள் என்று தோன்றுகிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 10, 2024 12:52

மூர்க்க தம்பதிகள் என்றால் கஞ்சா பிசினஸ் செய்ய மாட்டார்கள் ..... அவங்க வேற லெவல் .... சிக்கும் வாய்ப்பும் குறைவே ....


KRISHNAN R
நவ 10, 2024 12:39

ஒரு வேளை அன்பா வளர்த்துப்பாங்களோ....


Barakat Ali
நவ 10, 2024 12:28

தம்பதிகள்தானா அல்லது மாடல் ஜோடியா ????


Saai Sundharamurthy AVK
நவ 10, 2024 11:29

இதற்கு பெயர் தான், தனக்கு தானே சூனியம் வைத்துக் கொள்வது.


நிக்கோல்தாம்சன்
நவ 10, 2024 10:33

இது போன்ற வட இந்தியர்கள் msr நகர் , சஞ்சய் நகர் , டாலர்ஸ் காலனி , பூபசன்றா போன்ற ஏரியாக்களை ஆக்ரமித்து செய்யும் அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமல்ல


ஆரூர் ரங்
நவ 10, 2024 13:09

ஜாஃபர் சாதிக் வடஇந்தியரா என்ன?


Senthoora
நவ 10, 2024 10:14

லாரி, லாரியா கடத்தும்போது கட்டிங் வாங்கி விட்டுவிடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை