| ADDED : ஜூலை 12, 2024 06:46 AM
குடகு: 'லிப்ட்' கொடுப்பதாக காரில் அழைத்துச் சென்று சிறுமியை பலாத்காரம் செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.குடகு, பொன்னம்பேட் குட்டா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியர் இருவர், கடந்த 9ம் தேதி மடிகேரி சென்று விட்டு, பஸ்சில் குட்டாவுக்கு வந்தனர். குட்டா பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது அங்கு காரில் வந்த ஐந்து வாலிபர்கள், சிறுமியரிடம் பேச்சு கொடுத்தனர்.'உங்கள் இருவரையும் காரில் வீட்டில் இறக்கி விடுகிறோம்' என்று கூறினர். இதனால் சிறுமியர் காரில் ஏறினர். ஆனால் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் கேரளா செல்லும் பாதையில் சென்றனர். அதிர்ச்சி அடைந்த சிறுமியர் அலறினர்.ஆனாலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி, ஒரு சிறுமியை ஐந்து பேரும் பலாத்காரம் செய்தனர். இன்னொரு சிறுமி அங்கிருந்து தப்பினார். சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு ஐந்து பேரும் காரில் தப்பினர்.தப்பிச் சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து, கிராம மக்களிடம் கூறினார். அங்கு வந்த கிராம மக்கள் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் குட்டா போலீசார், கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரா, 24, ராகுல், 21, மனு, 25, சந்தீப், 27, அக் ஷய், 27 ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.