உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹதாயி திட்டத்துக்கு கோவா முட்டுக்கட்டை மத்திய ஆய்வு குழுவினர் பெலகாவியில் ஆய்வு

மஹதாயி திட்டத்துக்கு கோவா முட்டுக்கட்டை மத்திய ஆய்வு குழுவினர் பெலகாவியில் ஆய்வு

பெங்களூரு: மஹதாயி திட்டத்துக்கு, கோவா அரசு மீண்டும் முட்டுக்கட்டை போட முயற்சிக்கிறது. கோவா அரசின் நெருக்கடியால், திட்டம் செயல்படுத்தும் பெலகாவியின் கனகும்பிக்கு, மத்திய ஆய்வு குழுவினர் வருகை தந்தனர்.கோவாவில் உற்பத்தியாகும் மஹதாயி ஆற்றில் இருந்து, கர்நாடகாவுக்கு 13 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் என, மஹதாயி தீர்ப்பாயம் 2018ல் தீர்ப்பளித்தது.தீர்ப்பு வெளியாகி ஆறு ஆண்டுகள் கடந்தும், ஒரு சொட்டு நீர் கூட கர்நாடகாவுக்கு கிடைக்கவில்லை. பெலகாவி மாவட்டத்தின் 13 தாலுகா மக்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கில், கலசா - பண்டூரி திட்டத்தை வகுத்தது. ஆனால் திட்டத்தை செயல்படுத்த விடாமல், கோவா அரசு தகராறு செய்கிறது.கர்நாடகாவுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்காமல் தடுக்க, கோவா அரசு முயற்சிக்கிறது. இந்த திட்டத்தால், எங்கள் மாநிலத்தில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என, கூறி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.இதையடுத்து, மத்திய குழுவினர் நேற்று பெலகாவிக்கு வந்தனர். கானாபுரா கனகும்பியின், மஹதாயி நீர்ப்பாசன பகுதியை பார்வையிட்டனர். தற்போதைய தண்ணீர் நிலவரம், தண்ணீர் பாய்ந்து எங்கு செல்கிறது என, ஆய்வு செய்தனர். கலசா, பண்டூரி கால்வாய்களை பார்வையிட்டனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், அதிகாரிகள் அந்தந்த இடங்களுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை