உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கக்கடன் தரும் ஏ.டி.எம்.,: தெலுங்கானாவில் அறிமுகம்

தங்கக்கடன் தரும் ஏ.டி.எம்.,: தெலுங்கானாவில் அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரங்கல்: நாட்டிலேயே முதன் முறையாக ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய, தங்கக் கடன் பெறும் ஏ.டி.எம்., தெலுங்கானாவின் வாரங்கல்லில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா சார்பில் தெலுங்கானாவின் வாரங்கல்லில், தங்கக் கடன் வழங்கும் ஏ.டி.எம்., அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எம்.வி.ராவ் இதை துவக்கி வைத்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இந்த ஏ.டி.எம்., இயங்கும். அதில் உள்ள பெட்டியில், தங்க நகைகளை வைத்தால், இயந்திரமே, அதன் தரத்தை ஆய்வு செய்யும். மேலும், தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப எவ்வளவு கடன் கிடைக்கும் என்பது தெரிவிக்கப்படும்.கடன் தொகையில், 10 சதவீதத்தை ஏ.டி.எம்., வாயிலாக உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள தொகை, வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இந்த சேவை கிடைக்கும்.மொத்தம், 10 நிமிடங்களுக்குள் கடன் கிடைத்துவிடும். இதன் வாயிலாக வங்கிக்கு சென்று காத்திருப்பது தவிர்க்க முடியும். மேலும், மிகவும் வெளிப்படையான நடைமுறை உறுதி செய்யப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துஉள்ளது.இந்த திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த வங்கி திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை