இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வெளிநாட்டினருக்கு அரசு கிடுக்கிப்பிடி
புதுடில்லி: நம் நாட்டில் காலாவதியான குடியேற்ற சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.நம் நாட்டுக்குள் வெளிநாட்டினர் நுழைந்து, தங்கியிருந்து, சொந்த நாட்டுக்கு திரும்பும் வரை, பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறைகளை உறுதி செய்யும் நோக்கத்தில், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா இயற்றப்பட்டுள்ளது. காலாவதியான குடியேற்ற சட்டத்தில் தற்காலத்துக்கு ஏற்றது போல பல்வேறு நவீன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த மசோதாவை, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். மசோதாவின் நோக்கம்
நம் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் எந்தவொரு வெளிநாட்டினரும் இந்தியாவுக்குள் நுழைவது அல்லது தொடர்ந்து தங்குவதை மறுப்பதற்கான தெளிவான விதிகளை இந்த மசோதா கோடிட்டுக் காட்டுகிறதுவெளிநாட்டில் இருந்து வருவோர் தங்கள் வருகையை கட்டாயமாக பதிவு செய்வது, அவர்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய கட்டுப்பாடுகளை விதிக்கிறதுகல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் வரும் வெளிநாட்டினர் குறித்த தகவல்களை, குடியேற்ற அதிகாரிகளிடம் அந்நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைபவர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க மசோதா வழி செய்கிறதுபோலி ஆவணங்கள் பயன்படுத்தி விசா பெற்றவர்களுக்கு 1 முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம், இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்விசா காலம் முடிந்தும் தங்கியிருப்போர், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்முறையான ஆவணங்களின்றி வெளிநாட்டினரை இந்தியா அழைத்து வரும் விமான நிறுவனங்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்; செலுத்த தவறினால் விமானம் பறிமுதல் செய்யப்படும் குடியேற்ற அதிகாரிகள் வாரன்ட் இல்லாமல் ஒருவரை கைது செய்ய மசோதா இடம் அளிக்கிறதுவெளிநாட்டு நபர் ஒருவர் நம் நாட்டுக்குள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது.இந்த மசோதாவுக்கு, பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இது, அரசியலமைப்பு விதிகளை மீறுவதாக குற்றஞ்சாட்டினர்.