உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்னி வீரர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு ஒடிசா போலீசில் வழங்க அரசு ஒப்புதல்

அக்னி வீரர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு ஒடிசா போலீசில் வழங்க அரசு ஒப்புதல்

புவனேஸ்வர் ஒடிசாவில் போலீஸ், தீயணைப்பு உள்ளிட்ட சீருடைப் பணியாளர்கள் துறைகளில், முன்னாள் அக்னி வீரர்களுக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ராணுவத்தில் சேருவதற்கான அக்னிவீரர்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற அக்னி வீரர்களில், 25 சதவீதம் பேர் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.மற்றவர்களுக்கு மாற்றுப் பணிகளில் சேர வாய்ப்பு அளிக்கப்படும். இதன்படி, பல மாநில அரசுகள் தங்களுடைய போலீஸ் உள்ளிட்ட துறைகளில் அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி வருகின்றன.ஒடிசாவில் போலீஸ், தீயணைப்பு, வனம், கலால் உள்ளிட்ட சீருடைப் பணியாளர் துறைகளில் முன்னாள் அக்னிவீரர்களுக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க, மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், அரசின் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களில் இந்த ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணிகளில் வயது வரம்பு விலக்கு உள்ளிட்ட சலுகைகளும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கோபால்புர் துறைமுக பராமரிப்பை, ரியல் எஸ்டேட் நிறுவனமான ஷரபோஜி பலாஞ்சி குழுமத்திடம் இருந்த, 56 சதவீத பங்குகளை, அதானி துறைமுகம் வாங்கியுள்ளது.அதுபோல, ஒடிசா ஸ்டீவ்டோர்ஸ் இடமிருந்த 39 சதவீத பங்குகளையும் அதானி துறைமுகம் வாங்கியுள்ளது.இதையடுத்து, கோபால்புர் துறைமுகத்தின் மொத்த பங்குகளில், 95 சதவீதம் அதானி துறைமுகத்திடமும், மீதமுள்ள 5 சதவீதம் ஒடிசா ஸ்டீவ்டோர்ஸ் இடமும் இருக்கும்.இந்த பங்கு மாற்றத்துக்கு ஒடிசா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அரசு பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் ஊழியர்களின் திருமணமாகாத மகள் மற்றும் வளர்ப்பு மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை