உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சியே: மம்தா

பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சியே: மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சி அளிப்பதாக மேற்குவங்க திரிணமுல் காங்., முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.ஏழு கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 04) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.இத்தேர்தல் முடிவுகள் குறித்து மேற்குவங்க ஆளும் திரிணமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டி, பா.ஜ.கட்சிக்கு இத்தேர்லில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தேர்தல் முடிவுகள் மூலம் அரசியல் ரீதியாக பா.ஜ.,வை திரிணமுல் காங்., வென்றுள்ளது. சந்தேஷ்காலி விவகாரத்தில் பலமுறை பொய் சொல்லியே வந்தது பா.ஜ.,இத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளை ஊன்று கோலாக பயன்படுத்த பா.ஜ., முயற்சிக்கிறது.மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் பிரதமர் மோடி. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடியால் இனி ‛‛இண்டியா'' கூட்டணியை உடைக்க முடியாது. உத்தவ், சரத்பவார், ஆகிய தலைவர்களுடனும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இத்தேர்தலில் கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி . இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Vasudevan
ஜூன் 06, 2024 19:33

பங்களாதேஷ் இல் இருந்து கள்ளத்தனமாக குடியேறியவர்கள் எல்லாம் நிரந்தர குடியேரிகள் ஆகி ரேஷன் ஆதார் பெற்று உங்களுக்கு ஆதரவா ஓட்டு போட வைத்து ஜெயிப்பது கேவலமா தெரியலயா ?


Parthasarathy Sarathy
ஜூன் 06, 2024 12:08

நீங்கள் காங்கிரஸ் உடன் கூட்டு வைத்திருந்தால் பிஜேபி இன்னும் குறைந்திருக்கும்


Lion Drsekar
ஜூன் 05, 2024 19:26

இவர்கள் யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் ஒன்று குடும்ப ஆட்சி இல்லை என்றால் தத்து எடுத்து பதவிக்காக எந்த ஒரு தீய சக்திகளுடன் கூட்டுக்குக்கு தயாராக இருக்கிறீர்கள். அதே போல் நாட்டு நலன் மீதும் அக்கறை கொண்டு செயல்பட்டால் நாடு விளங்கும். வந்தே மாதரம்


Jones
ஜூன் 05, 2024 08:11

மக்களின் செல்வாக்கை மோடி இழந்துவிட்டார் என்பது மிகவும் சரியான கருத்து. பிரதமர் மோடி அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டால் மிகவும் சரியாக இருக்கும்.


Neutrallite
ஜூன் 05, 2024 09:48

அப்போ அவுங்க ஜெயிச்ச 292 தொகுதியில் இருக்குறவங்கள மக்களாக நீங்க பாக்கலியா?


Nagercoil Suresh
ஜூன் 05, 2024 02:31

ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி நாட்டிற்கு முக்கியம் தேவை அதே நேரம் பிரதமர் மோடி பிரதமராக தொடர்வதில் மகிழ்ச்சியே...மனிதர்கள் பல வேளைகளில் அதிக பலம் இருக்கும்பொழுது தவறான முடிவுகளை எடுக்கக்கூடும் இதுவே நம்முடைய இயற்கையான குணம்...ஒடிசாவில் கூடவே இருந்துகொண்டு கடைசி நேரத்தில் கூட்டணி வேண்டாம் விகே பாண்டியனை வைத்து தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஆட்சியை பிடித்தது தவறாக பார்க்கப்படுகிறது, மத்திய பிரதேசத்தில் சிந்தியாவை காங்கிரஸ் கட்சி இழந்தது தான் சம்மட்டி அடிக்கு காரணம், அங்கு நல்ல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இல்லை, மம்தாவை பொறுத்தமட்டில் ஸ்டராங் போராளி என நிரூபித்துவிட்டார் பாராட்டிற்குரியது, அடுத்த மாம்பழ சீசனில் டெல்லிக்கு பார்சல் அனுப்ப மாட்டார் போல தெரியுது...


Kasimani Baskaran
ஜூன் 04, 2024 21:39

கூட்டணிக்குள் எதிரும் புதிருமாக நின்று காங்கிரசை தோற்கடித்து விட்டு அவர்களுடன் கூட்டு சேருவது சுத்த கோமாளித்தனம். தேர்தலுக்கு முன்னரே நாங்கள் அவர்களுடன் இல்லை என்று சொல்லி விட்டு இனி சேர்த்து கும்மியடித்து ஆட்சியை பிடிக்க முயன்றால் மகா கேவலமாகப்போய்விடும். கெஜ்ரிவாலை மதிக்குமளவுக்குக்கூட பொது மக்கள் மதிக்க மாட்டார்கள் .


sankar
ஜூன் 04, 2024 21:15

அராஜகம் முடிவுக்கு வரும் அம்மணி - அன்று நீ ஏலவே முடியாத அடி விழும்


rsudarsan lic
ஜூன் 04, 2024 20:24

Thank you didi for knowing your true colour. INDIA is proud of you


Priyan Vadanad
ஜூன் 04, 2024 19:57

மம்தா, கெஜ்ரிவால் மாதிரி தலைவர்களின் முயற்சியால்தான் பிஜேபி இந்த அளவாவது அள்ளியது. இவர்கள் மட்டும் சரியானபடி ஒத்துழைத்திருந்தால் பாவகாவுக்கு நெத்தியடித்தான் கிடைத்திருக்கும்.


Neutrallite
ஜூன் 05, 2024 09:51

இதுக்கே உங்களுக்கு ஒத்துமை இல்லையே...vazhakkamaa ஒரு நேர்மையான போலீஸ் இருந்தா அவனை எதிர்க்க எல்லா திருடர்களும் ஒத்தும காட்டுவானுங்க. அதுலயும் தனக்கு என்ன கிடைக்கும்னு பாக்குற அரசியல்வாதிங்க நீங்க... அப்புறம் வருத்தப்பட்டு என்ன பிரயோசனம் வடநாடு?


Ramesh Sargam
ஜூன் 04, 2024 19:40

எல்லாம் நீ செய்த அயோக்கியத்தனம். அருகில் உள்ள முஸ்லீம் நாடுகளில் இருந்து மக்களை வரவழைத்து அடைக்கலம் கொடுத்து அவர்கள் வாக்குகளை நீ மற்றும் உன் கூட்டணி கட்சியினர் அள்ளிவிட்டீர்கள். தைரியமிருந்திருந்தால், தனியாக, கூட்டணி அமைக்காமல் உங்களால் பாஜகாவை எதிர்கொள்ளமுடியுமா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை