உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா சட்டசபை தேர்தல்: தனித்து களம் காணும் ஆம்ஆத்மி அள்ளி விட்ட 5 வாக்குறுதிகள்

ஹரியானா சட்டசபை தேர்தல்: தனித்து களம் காணும் ஆம்ஆத்மி அள்ளி விட்ட 5 வாக்குறுதிகள்

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை ஆம்ஆத்மி வெளியிட்டுள்ளது. இலவச மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தற்போதே வேலைகளில் இறங்கிவிட்டன.லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் இண்டியா கூட்டணியில் இருந்த ஆம் ஆத்மி, ஹரியானா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை.இந்நிலையில், இன்று (ஜூலை 20) ஹரியானா மாநிலத்தின் பஞ்சகுலா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் 5 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.1. மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் இலவசம் மின்சாரம் வழங்கப்படும்.2. அனைவருக்கும் இலவசமாக நல்ல மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.3. அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படும்.4. ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும்.5. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramarajpd
ஜூலை 21, 2024 11:43

இண்டி கூட்டணி ஆம் ஆத்மி க்கு வழி விட்டு காங்கிரஸ் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி க்கு ஆதரவு தெரிவித்து சட்ட சபை தேர்தலில் நிற்காது.


C.SRIRAM
ஜூலை 20, 2024 23:35

இந்த கூமுட்டைக்கும்பலிடம் மின்சாரம் படும் பாடு சொல்லி மாளாது . எப்படியா கொடுப்பேங்க ?. சாராய உழல் பணத்திலிருந்தா ?. அது சில மாதங்களுக்கு கூட போதாது .


தத்வமசி
ஜூலை 20, 2024 20:21

இவர்கள் சொல்லியுள்ள எந்த ஒரு வாக்குறுதியும் நடைபெறாது. கூடவே ஆறாவதாக ஒன்றை செய்ய வேண்டும். இவர்களே ஒரு ரிசர்வ் வங்கி தொடங்கி, நோட்டை அடிக்க வேண்டியது தான் பாக்கி. இனி மாநில அரசு எங்களுக்கும் ஒரு ரிசர்வ் வங்கி வேண்டும், அது மாநிலத்தின் உரிமை என்று கேட்டாலும் கேட்பார்கள். அதற்கு ஆதரவாக நூறு பேர் கொடி தூக்கிக் கொண்டு வருவார்கள். கேட்பவன் கேனையானாக இருந்தால் இப்படித்தான் வாக்குறுதிகளை அள்ளி விடுவார்கள்.


kulandai kannan
ஜூலை 20, 2024 20:16

இதனால் அச்சப்பட வேண்டியது காங்கிரஸ் தான். ஆம் ஆத்மி காங் வாக்குகளைப் பிரிக்கும்.


Krishnamurthy Venkatesan
ஜூலை 20, 2024 19:57

A STRONG, DETERMINANT, POWERFUL, PATRIOT CITIZEN SHOULD BE APPOINTED AS CHIEF ELECTION COMMISSIONER SO THAT THE FREEBIES OFFERED BY POLITICAL PARTIES DURING ELECTION CAN BE CURBED. WHATEVER THE FREES, LET THE POLITICAL PARTY BEAR THE EXPENDITURE FROM THEIR OWN FUND NOT FROM THE TAX PAYERS MONEY. THE FOUNDATION LAID BY TAMILNADU POLITICAL PARTIES LEAD THE COUNTRY TO A DISASTER. PLEASE SAVE.


Duruvesan
ஜூலை 20, 2024 18:52

பிஜேபி டெபாசிட் வாங்காது, ராவுள் வருஷம் 1 லக்சம் கொடுப்பாரு, எல்லாமே பிரீ கொடுப்பாரு, எவனும் வேலைக்கு போக வேணாம். ஆக காங்கிரஸ் வெற்றி உறுதி


GMM
ஜூலை 20, 2024 18:40

ஆபத்தான இலவச அறிவிப்புகள். நாள் முழுவதும் மின்சாரம் இலவசம் சாத்தியமா? ஒருவர் அரசிடம் உதவி கேட்டு விண்ணப்பிக்கட்டும். அவர் திருப்பி செலுத்த வாழ்நாளில் வாய்ப்பு கிடைக்கும். அதுவரை கடனாக இருக்கட்டும். இறந்து விட்டால் தள்ளுபடி. இதை கூட பிஜேபி அமுல்படுத்த முடியாதா? முடியாது என்றால், வீட்டு வயரிங், பல்ப், பேன், குளிர் சாதனம் இலவசமாக கொடுத்து, மின்சாரமும் இலவசமாக வாழ்நாள் முழுவதும் கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுங்கள். ஆம் ஆத்மி அரசியல் தீவிரவாத கட்சி. எப்படியும் அதிகாரம் பெற வேண்டும் என்ற உணர்வில் உள்ளது. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் இலவசம் பற்றி கவலை படுவது, தலையிட்டு முடிவு செய்ய போவது இல்லை. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்


nagendhiran
ஜூலை 20, 2024 17:59

ஒருவரை ஏமாற்ற முதலில் அவர்களோடைய ஆசையை தூண்டனும்? துடைப்பம் அந்த வேலையை சரியா செய்கிறது?


RAAJ68
ஜூலை 20, 2024 17:46

லாயேங்கே கேஜ்ரிவால் என்று இந்தியில் எழுதி உள்ளனர். அதாவது கேஜ்ரிவாலை கொண்டு வருவார்களாம்.


Swaminathan L
ஜூலை 20, 2024 17:35

ஹரியானாவில் கிட்டத்தட்ட 90 இலட்சம் வீடுகள் உள்ளன. அத்தனை வீடுகளுக்கும் 24க்ஸ்7 இலவச மின்சாரம் வழங்கப் போகிறதா ஆம் ஆத்மி கட்சி? கிட்டத்தட்ட மூன்று கோடியே பத்து இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் இலவச மருத்துவ சேவை தருமா? ஏறத்தாழ ஒரு கோடி பெண்கள் இருக்கிறார்கள். மாதம் ஆயிரம் கோடி செலவில் அனைவருக்கும் மாதம் தலா ஆயிரம் ரூபாய் தர முடியும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை