உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா தேர்தல் தேதியை மாத்துங்க : தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ., கடிதம்

ஹரியானா தேர்தல் தேதியை மாத்துங்க : தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ., கடிதம்

சண்டிகர்: தொடர் விடுமுறை வருவதால் ஹரியானா சட்டசபை தேர்தல் தேதியை மாற்ற தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.90 இடங்களை கொண்ட ஹரியானா மாநில சட்டசபைக்கு அக்.01ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் தேதியை கடந்த 16-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்.04ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில், ஹரியானா மாநில பா.ஜ, தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடித விவரம், தேர்தல் தேதியான அக்.01-ம் தேதிக்கு முன்பாக செப்.28, 29ம் தேதிகள் (சனி ,ஞாயிறு ) விடுமுறை , தேர்தல் தேதியான அக் 01 ம் தேதி விடுமுறை ,அக்.02 காந்திஜெயந்தி, அக்.03 அக்ரசென் ஜெயந்தி என தொடர்ச்சியாக விடுமுறை என்பதால், வாக்குப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஆக 25, 2024 11:15

தொடர் விடுமுறை நாட்களில் தேர்தல் நடத்தியதால்தான் தமிழகத்தில் வாக்குப்பதிவு குறைவாகவே இருந்தது. அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது


kesavan T A
ஆக 25, 2024 05:16

Ohm Muruga


கல்யாணராமன்
ஆக 25, 2024 00:33

தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பு தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கவனிக்காதா? தேதி அறிவித்த உடனேயே அரசியல் கட்சிகள் கவனிக்கவில்லையா? ஏன் இப்படி எல்லோரும் முட்டாள்களாக இருக்கிறீர்கள்?


புதிய வீடியோ