உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குருவை ஏமாற்றிய கெஜ்ரிவால் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்?: ராஜ்நாத் சிங் கேள்வி

குருவை ஏமாற்றிய கெஜ்ரிவால் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்?: ராஜ்நாத் சிங் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவால், அவரது குரு அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர். அவர், மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்? என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் மே 25ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. பிரசாரம் களை கட்டியுள்ளது. டில்லியில் துவாரகா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: வாக்குறுதிகளை ஆம் ஆத்மி ஒருபோதும் நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத, டில்லி அரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்க தகுதியில்லை. கெஜ்ரிவால், அவரது குருவான அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர். அவர் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்?.

பெரிய மஹால்

குருவின் பேச்சை மீறி புதிய அரசியல் கட்சியை கெஜ்ரிவால் உருவாக்கினார். டில்லியை லண்டனைப் போல மாற்றுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியினர் சொன்னார்கள். நம் நாடு இப்போது லண்டனை விட மிகவும் முன்னேறி உள்ளது. யமுனை நதியை சுத்தப்படுத்துவதாக ஆம்ஆத்மி கட்சியினர் உறுதியளித்தனர். ஆனால் யமுனை நதியை சுத்தம் செய்தார்களா?. கெஜ்ரிவால் முதல்வர் இல்லத்தில் வசிக்க மாட்டேன் என்று உறுதியளித்தார். இருப்பினும், அவர் தனக்காக பெரிய மஹால் கட்டினார்.

பி 'டீம்'

ஆம்ஆத்மி பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து ஏதும் பேசாமல் கெஜ்ரிவால் அமைதியாக இருந்தார். நீண்ட நாட்களாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. காங்கிரசின் பி 'டீம்' ஆக ஆம் ஆத்மி செயல்படுகிறது. அயோத்தியில் ராமர் கூடாரத்தில் இருந்து அரண்மனைக்கு சென்றுள்ளார். பாரதம் நிச்சயமாக 'ராம ராஜ்ஜியம்' எழுச்சியை பெறும். இதனை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

NAGARAJAN
மே 25, 2024 07:44

இந்திய மக்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றும் பஜக வை விட அவர் எவ்வளவோ மேல். . எவ்வளவோ ஏமாற்று வேலைகள் நீங்கள் செய்வது. .


venkatakrishna
மே 24, 2024 17:33

ஏமாற்றும் திறமை இருந்ததால் தான் டெல்லி மக்களையே ஏமாற்ற முடிகிறது. அண்ணாயிசம் நன்கு கற்றவர் போலும்.


Syed ghouse basha
மே 23, 2024 20:11

குருஜி அத்வானியை ஏமாற்றிய மோடி பதவிக்கு வரும்போது கெஜ்ரிவால் வரமுடியாதா?


Ramaswamy Jayaraman
மே 23, 2024 15:51

குருவை பகைத்துக்கொண்டு வெளியே வந்தவர்கள்தான் தமிழகத்தை ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள் அன்னா ஹசாரே ஊழலுக்காக குரல் கொடுத்தவர் அவரை விட்டு வெளியே வந்து பதவியை பிடித்து ஊழல் செய்யும் தலைவர்தான் நமது கெஜ்ரிவால் ஊழலில் மூழ்குவது சாக்கடையில் மூழ் குவது போல் வெளியே வரமாட்டார்கள் வெளி உலகத்தில் நல்ல காற்று நல்ல மக்கள் இருப்பார்கள் அது பெருச்சாளிளுக்கு ஒத்து வராது


rishi
மே 23, 2024 15:48

கிளீன் இந்தியா வேண்டுமா currupted இந்தியா வேண்டுமா , கலாச்சார பண்பாட்டு இந்தியா வேண்டுமா கதம்ப சாக்கடைகளில் இந்தியா வேண்டுமா, ஆன்மிக இந்திய வேண்டுமா கிருத்துவ மிஸ்ஸினரிகளின் இந்தியா வேண்டுமா , ராம ராஜ்யம் வேண்டுமா ரௌடிகளின் ராஜ்யம் வேண்டுமா, பாதுகாப்பான இந்தியா வேண்டுமா பங்கரவாதிகளின் கூடாரமான இந்தியா வேண்டுமா மோடியின் இந்தியா வேண்டுமா கேடிகளின் இந்தியா வேண்டுமா


Rajinikanth
மே 23, 2024 14:53

மக்களின் நம்பிக்கையை பெற்று தன் முதல்வர் ஆகி இருக்கிறார் ஏதோ மக்கள் நினைப்பதை நீங்கள் மட்டும் தன் கணிக்க முடியும் என்பது போல பேச வேண்டாம் ராஜ்நாத் அவர்களே


A1Suresh
மே 23, 2024 14:33

கேஜ்ரிவால் ஜாதகத்தில் குருவும் ராஹுவும் ஒரே கட்டத்தில் நிற்பதால் குருதுரோகம் இயல்பு தான்


SP
மே 23, 2024 14:18

டில்லிக்கு தனி சட்டமன்றம் தேவையில்லை.அதை நடைமுறை படுத்த சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்.


Senthoora
மே 23, 2024 13:37

உங்க தலைவர் இராமரையே ஏமாற்றுகிறாரே


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி