உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் காலை கழுவி தண்ணீரை குடிக்கிறேன்

முதல்வர் காலை கழுவி தண்ணீரை குடிக்கிறேன்

ஷிவமொகா: “மூடாவில் இருந்து சட்டவிரோதமாக மனைவிக்கு, முதல்வர் சித்தராமையா மனை வாங்கித் தரவில்லை என நிரூபணமானால், அவரது காலை கழுவி தண்ணீர் குடிக்கிறேன்,” என, ஷிவமொகா பா.ஜ., - எம்.எல்.ஏ., சன்னபசப்பா சவால் விட்டு உள்ளார்.நேற்று அவர் அளித்த பேட்டி:'அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 'மூடா'வில் இருந்து மனைவி பார்வதிக்கு வீட்டுமனை வாங்கி தரவில்லை' என, முதல்வர் சித்தராமையா கூறுகிறார். அப்படி என்றால் விசாரணையை எதிர்கொள்ள, பயப்படுவது ஏன்?அவர் நிரபராதி என்று நிரூபணம் ஆனால், அவரது காலை கழுவி தண்ணீர் குடிக்கிறேன். சட்டசபை கூட்டத்தில் நாங்கள் எழுப்பிய, கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. அவரை பார்த்தால் கறை படிந்த முதல்வராக தெரிகிறது. அவர் மீது விசாரணைக்கு உத்தரவிட்ட கவர்னரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.விசாரணையை எதிர்கொள்வதற்கு வசதியாக, முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும். கவர்னர் பதவி, அரசின் ஒரு பகுதி. பதவி பிரமாணம் செய்து வைக்கும் கவர்னருக்கு, பதவியை பறிக்கும் உரிமையும் உண்டு.கவர்னரின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்துவது கேவலமான செயல். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை