உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதாகர் வெற்றி பெற்றால்... காங்., -- எம்.எல்.ஏ., சவால்

சுதாகர் வெற்றி பெற்றால்... காங்., -- எம்.எல்.ஏ., சவால்

சிக்கபல்லாபூர்: ''பா.ஜ., வேட்பாளர் சுதாகர், வெறும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், நான் அரசியல் சன்னியாசம் பெறுவேன்,'' என, காங்., - எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் சவால் விடுத்தார்.லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் சுதாகர், அதிகம் போராடி பா.ஜ., சீட் பெற்றார்; பிரசாரம் செய்து வருகிறார். இவரை தோற்கடிப்பதாக காங்., -- எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் சவால் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, சிக்கபல்லாபூரில் நேற்று அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் சுதாகர், வெறும் ஒரு ஓட்டில் வெற்றி பெற்றாலும் நான் அரசியல் சன்னியாசம் பெறுகிறேன். ஒருவேளை அவர் தோற்றால், அவர் செய்யும் அனைத்து தொழில்களையும் விட்டுவிட வேண்டும்.என் சவாலை ஏற்பதானால், இருவரும் சேர்ந்து நந்திகேஸ்வரர் கோவிலில் சத்திய பிரமாணம் செய்யலாம். சுதாகரை லோக்சபா படியை மிதிக்க விடமாட்டோம். தைரியம் இருந்தால், சுதாகர் என் சவாலை ஏற்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ