உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாய்ப்புகளின் பூமியில்... அமெரிக்காவில் வரவேற்பு படம் வெளியிட்டு ஸ்டாலின் பெருமிதம்

வாய்ப்புகளின் பூமியில்... அமெரிக்காவில் வரவேற்பு படம் வெளியிட்டு ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா வாழ் தமிழர்கள் வரவேற்பு அளித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, 'வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன்' என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக, நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 27) இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sxccr12s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில்,இன்று(ஆகஸ்ட் 29) அமெரிக்கா வாழ் தமிழர்கள் வரவேற்பு அளித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். ''தமிழகம் செழுமை பெற அமெரிக்கா வந்துள்ளேன். வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன்' என ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அது மட்டுமின்றி, பல்வேறு தொழில் நிறுவன உரிமையாளர்களை தனித்தனியாகவும் சந்தித்துப்பேசுகிறார். ஒரு சில முன்னணி தொழில் நிறுவனங்களுக்கும் அவர் நேரில் சென்று பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Gajageswari
ஆக 30, 2024 05:36

தமிழகத்தில் தமிழன் முதலீடு செய்ய அனுமதி இல்லை.


Anu Sekhar
ஆக 29, 2024 21:34

வெளியீட்டு ஈர்க்க கமிசன் 40 % என்று போர்டு வையுங்கள். ஒரு ஈ காக்கை கூட வராது.


Amruta Putran
ஆக 29, 2024 18:04

PM Modi goes to Foreign Countries and stays maximum 2 to 3 days and brings lot of investments.


Mr Krish Tamilnadu
ஆக 29, 2024 17:59

இந்தியா என்ன வாய்ப்பு இல்லாத பூமியா?. ஒவ்வொரு சொல்லும் இதே பாணியா.. நேரம் காலம் இல்ல?.


Amruta Putran
ஆக 29, 2024 17:58

PM Modi goes to each country stays max of 2,3 days and brings lot of investments. But why stalin stays more than 15 days in US, with our Tax money?


Anu Sekhar
ஆக 29, 2024 21:42

இவருக்கு சொந்த வேலை நிறைய இருக்கிறது. இங்கே உள்ளவர்கள் இவரை சீண்ட மாட்டார்கள். இவர் தான் அப்பொய்ன்டெமென்ட் வாங்கி காக்கணும் . போட்டோஷூட்டுக்காக. எங்கே அமெரிக்காவில் உள்ளவர்கள் இந்த மாதிரி லஞ்ச பேர்வழிகளிடம் நேரத்தாகி வீண் பண்ண மாட்டார்கள்.


ram
ஆக 29, 2024 15:49

Macha Swag Dance - Bollywood Dance / Kuthu டான்ஸ், நியூயார்க் , யுனைடெட் ஸ்டேட்ஸ் - இவர்களுக்கு பணம் கொடுத்தது யாரோ.


ram
ஆக 29, 2024 15:37

என்ன இங்கே இருநூறு ரூபாய் அங்கு இருநூறு டாலர் அவ்வளவுதான் வித்தியாசம்,


ஆரூர் ரங்
ஆக 29, 2024 15:02

அடுத்து முதலீட்டை ஈர்க்க ககன்யான் விண்கலத்தில் வேற்று மண்டல சுற்றுப்பயணம்.


திருப்பதி டாலர்
ஆக 29, 2024 14:10

துபாய் திர்ஹாம் போயி, ஸ்பெயினின் யூரோ போயி இனிமேல் டாலரில் துட்டு பாக்கலாம்.


Anand
ஆக 29, 2024 13:07

துபாய், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சென்று ஏகப்பட்ட முதலீடுகளை பெற்றதால் தமிழ்நாடு பாகிஸ்தான் ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டது, அடுத்து வரப்போகும் அமெரிக்கா முதலீடுகளால் தமிழ்நாடு மேலும் உயர்ந்து ஆப்கானிஸ்தான் ரேஞ்சை எட்டிவிடும்......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை