மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
26 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
37 minutes ago
பெங்களூரு: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பழைய மைசூரு பகுதியில் ம.ஜ.த., தன் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.லோக்சபா தேர்தலுக்காக, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்துக்கொண்டன. கோலார், மாண்டியா, ஹாசன் தொகுதிகளில் மட்டும் ம.ஜ.த., போட்டியிட்டது. மாண்டியாவில் குமாரசாமி, கோலாரில் மல்லேஸ் பாபு, ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணா களமிறங்கினர். இவர்களில் பிரஜ்வலை தவிர, மற்ற இருவரும் வெற்றி பெற்றனர்.சட்டசபை தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்த ம.ஜ.த., தற்போதைய லோக்சபா தேர்தலில், பழைய மைசூரு பகுதியில் தன் பலம் குறையவில்லை என்பதை, காங்கிரசுக்கு உணர்த்தி உள்ளது.மாண்டியா தொகுதியில், குமாரசாமியை தோற்கடித்தே ஆக வேண்டும் என, காங்கிரஸ் உறுதிபூண்டது; ஸ்டார் சந்துருவை களமிறக்கியது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, அமைச்சர்கள், தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.நடிகர் தர்ஷனும் கூட, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். 'ரோடு ஷோ' நடத்தினார். ஆனால் காங்கிரசின் முயற்சி பலனளிக்கவில்லை. குமாரசாமி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அதே போன்று கோலாரிலும், ம.ஜ.த., வேட்பாளர் மல்லேஸ் பாபுவை தோற்கடிக்க காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சி கைகூடவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்ததால், எதிர்பார்த்ததை போன்று ம.ஜ.த.,வுக்கு லாபமாக இருந்தது.பெங்களூரு ரூரல், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு சென்ட்ரல், சிக்கபல்லாபூர், துமகூரு தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவியது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்பது தெரிகிறது. ஒக்கலிகர், லிங்காயத் ஓட்டுகள் இணைந்ததால், வெற்றி சாத்தியமானது.சட்டசபை தேர்தலில் பழைய மைசூரு பகுதியில் காங்கிரசுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன. லோக்சபா தேர்தலில் இப்பகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
26 minutes ago
37 minutes ago