உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறையில் இருந்து சுயேட்சை எம்.பி.யான பயங்கரவாதிக்கு ஜாமின்

சிறையில் இருந்து சுயேட்சை எம்.பி.யான பயங்கரவாதிக்கு ஜாமின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திகார் சிறையில் இருந்து கொண்டு சுயேட்சை எம்.பி.யாக தேர்வு பெற்ற பயங்கரவாதி அப்துல் ரஷீத்திற்கு கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.லோக்சபா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டவர் ஷேக் அப்துல் ரஷீத். பயங்கரவாத அமைப்புக்கு நிதிதிரட்டியதாக 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் இருந்த படியே நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தான் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ, கோர்ட்டில் ரஷீத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிரண் குப்தா அனுமதி வழங்கினார். என்.ஐ.ஏ., போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஜூலை 02 -ம் தேதி பாராளுமன்றத்தில் எம்.பி.,யாக பதவியேற்றார்.இந்நிலையில் நடக்கவுள்ள ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய வேண்டி தனக்கு இடைக்கால ஜாமின் கோரி டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சந்தர்ஜித்சிங், இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

p.s.mahadevan
செப் 11, 2024 16:27

இந்திய ஜனநாயகத்தில் மட்டும் தான் இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் அரங்கேறும். நீதி மன்றங்கள் சட்டத்தை மட்டும் பார்க்காமல் நியாயத்தையும் பார்த்தல் நல்லது. நாட்டின் பிரதமரை யாரேனும் விமர்சித்தால் தவறு அல்ல என்று கூறும் நீதிபதிகளை யாரேனும் விமர்சித்தால் அது தவறு என்று கூறுகிறார்கள்.


Nandakumar Naidu.
செப் 11, 2024 07:24

வாழ்க நீதிமன்றமும், நீத்பதிகளும். நாட்டை குட்டிச்சுராக்குவதற்குத் தான் இந்திய நீதி மன்றங்கள். வெட்கக்கேடு.


Kanns
செப் 11, 2024 06:45

How AntiNation Terrorist -Accused was allowed to Stand for Elections with Bails for Subsequent MP officetaking & Electioneering. All Concerned Judges Must be Arrested & Face AntiNation Terrorism Charges


வாய்மையே வெல்லும்
செப் 10, 2024 22:11

கூடியசீக்கிரம் ஜின்னா ஆளுங்க பக்கத்துக்கு நாட்டில் இருந்துகொண்டு நம்மூரு எம்பி சீட்டு வாங்கினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. வேதனையே மிச்சம். நாட்டு நலம் அசிங்கத்தின் உச்சம்


subramanian
செப் 10, 2024 21:54

பயங்கரவாதிகளுக்கு மிகவும் சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது. நீதித்துறை ஆத்ம பரிசு பரிசோதனை செய்துகொள்ளாவிட்டால்... நாட்டுக்கு ஆபத்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை