உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி உடையும்: பிரதமர் மோடி பேச்சு

லோக்சபா தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி உடையும்: பிரதமர் மோடி பேச்சு

மும்பை: 'லோக்சபா தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி உடையும்' என மஹா.,வில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாந்தேட் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நேற்று முதல் கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்கட்ட தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் ஓட்டளித்துள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளது. தே.ஜ., கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ak040iys&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

25 சதவீதம்

லோக்சபா தேர்தலில் 25 சதவீதம் இடங்களில் இண்டியா கூட்டணியினர் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி உடையும்.குடியுரிமை திருத்தச் சட்டம் இல்லாவிட்டால், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சீக்கியர்களின் நிலைமை என்னவாகும். மஹாராஷ்டிரா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல தசாப்தங்களாக காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தியது.

சோனியா, ராகுலை சாடிய மோடி

காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை இழந்துவிட்டனர், எனவே ராஜ்யசபா எம்.பி., ஆகி உள்ளனர். அமேதி தொகுதியில் இருந்து வெளியேறிய ராகுல் வயநாட்டில் இருந்தும் வெளியேற்றப்படுவார். தேர்தல் முடிவு வெளிவருவதற்கு, முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளனர். இண்டியா கூட்டணியின் தலைவர் யார் என்பதை சொல்ல முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Azar Mufeen
ஏப் 21, 2024 02:06

தானாக உடையும் என்றால் தானாகவே வருவார்கள் அல்லவா அப்புறம் எதுக்கு ஜி அந்த கட்சியில இருந்து ஆளை இழுக்கனும்


Kasimani Baskaran
ஏப் 20, 2024 14:28

தலைவரே இல்லாத ஒரு கூட்டணி எப்படி வெளங்கும் இதில் கூடுதலாக சனாதன ஒழிப்புக்கு வேறு ஒப்புதல்


குமரி குருவி
ஏப் 20, 2024 13:55

தற்போதைய தேர்தலின் போது பல தொகுதிகளில் இண்டியா கூட்டணி எலியும் பூனையாகவுமே செயல்பட்டனர்


R Kay
ஏப் 20, 2024 13:46

உதவாக்கரை கூட்டணியை குறித்து பேசி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் ஜி நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உங்கள் எதிர்கால திட்டத்தை கூறி வாக்கு சேகரிக்கலாம் Negativity வேண்டாமே


Ramesh Sargam
ஏப் 20, 2024 12:41

இண்டியா கூட்டணி எப்படி உடையும் ....அதுதான் முதலில் கூடவே இல்லையே பெயரை நன்றாக கவனியுங்கள்: INDIA வொவொரு எழுத்துக்கும் நடுவே ஒரு முற்றுப்புள்ளி கூடவே இல்லை


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ