உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணும் இந்தியா: ராஜ்நாத் சிங் சொல்கிறார்!

அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணும் இந்தியா: ராஜ்நாத் சிங் சொல்கிறார்!

புதுடில்லி: 'இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண விரும்புகிறது' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்வதற்கான காலம் வந்துவிட்டது. இது குறித்து உள்துறை அமைச்சகம் தான் முடிவு எடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் புரிந்து கொண்டுள்ளது.

நல்லுறவு

இந்தியாவுக்கு எதிராக, பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்று விட்டு, அவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டால், அவர்களைக் கொல்ல பாகிஸ்தானுக்குள் நுழைவோம்.இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண விரும்புகிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் வெளிநாட்டு மண்ணிலும் ஒழிக்கப்பட வேண்டும். எந்த ஒரு அண்டை நாட்டின் நிலப்பரப்பையும் இந்தியா ஆக்கிரமித்தது கிடையாது.

விட மாட்டோம்

இந்தியாவுக்கு எதிராக யாரேனும் பயங்கரவாதத்தை தூண்டினால் , நாங்கள் அவர்களை விட்டுவிட மாட்டோம். பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். அந்த பகுதி மக்கள் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Lion Drsekar
ஏப் 06, 2024 14:13

அண்டை நாடுகள் என்ன உலகம் முழுவதுமே நம் தாய் நாடு நன்றாக இருக்கவேண்டும் என்று தினம் தினம் இறைவனிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இங்குதான் விதி விளையாடுகிறது தேர்தல் நேரத்தில் பேசும் பேச்சு ஒன்று , வெற்றிபெற்ற பின்பு படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற கதையாகிவிட்டது ஒரு குறிப்பிட்ட ஜாதியை ஒழிக்கவே ஒரு ஜாதியின் பெயரில் ஒரு கட்சி , பல இயக்கங்கள் , உலகிலேயே வேறு எங்குமே இது போன்ற ஒரு அமைப்பை நாம் காண முடியாது எரியூம் கொள்ளியில் எண்ணையை ஊற்றியது போல் மூன்றாவது வாரிசோ கேட்கவே வேண்டாம் மலேரியா கொசுபோல் ஒழிக்கவேண்டும் என்று கூறி வீரநடை பட்டுவரும் இந்த காலத்தில் நம் நாடு கேட்டு கூட்டிச்செவிராகவேண்டும் , அழியவேண்டும் , மக்கள் ஒருவரை ஒருவர் தூக்கிக்கொண்டு இரத்த களறியில் சாகவேண்டும் ஏற்பதே குறிக்கோளாகக் கொண்டு இருக்கும் தவறானவர்களை திருத்த முன்வாருங்கள் மக்களை சுதந்திரமாக வாழ விடுங்கள் எல்லோரும் ஒற்றுமையாக முன்போல் வாழவேண்டும் , இதுதான் அண்டை நாடுகளின் எண்ணம் வந்தே மாதரம்


Arachi
ஏப் 06, 2024 11:58

அண்டை நாட்டுடன் நல்லுறவு காட்டாமல் நசுக்கிறீங்களே அது நல்லதா? பாராளுமன்றத்திற்கு வராமல் டிமிக்கி கொடுப்பவர் தான்


Rajah
ஏப் 06, 2024 11:20

சீன இராணுவத்தின் உளவாளிகள் காந்தி, கம்யூனிசம் என்ற பெயரில் இருக்கின்றார்கள் இரத்த திலகம் என்ற படம் சீன இராணுவத்திற்கு எதிரான போரைப் பற்றியது இப்படம் வெளியான போது கேரள கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்து சீனாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள் கேரளா ஸ்டோரி படம் ஒளிபரப்பாவதற்கும் ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றார்கள் அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேண நாம் முயன்றாலும் இங்குள்ளவர்கள் விடமாட்டார்கள்


Rajah
ஏப் 06, 2024 11:06

இலங்கை இராணுவத்தை விட இந்திய இராணுவம்தான் தமிழர்கள் மீது கொலைகளையும் சித்திரவதைகளையும் செய்தார்கள் என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை அதேசமயம் காங்கிரஸ் அரசு போராளிகளுக்கும் உதவி செய்தது பின்னர் அவர்களையே அழித்தார்கள் தற்போது இலங்கை வாழ் அனைத்து மக்களும் இந்தியாவை வெறுக்கின்றார்கள் என்னதான் பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷ் பிரிவதற்கு இந்தியா உதவினாலும் அங்குள்ள ஒரு நாய் கூட இந்தியாவை மதிப்பதில்லை


NALAM VIRUMBI
ஏப் 06, 2024 10:39

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்க வே ண்டும்


Apposthalan samlin
ஏப் 06, 2024 10:12

சீனா நமது நிலபரபை ஆக்கிரமித்து உள்ளது அருணாசல இல் ஆக்கிரமித்து உள்ளது எப்பொழுது விரட்ட போகிறீர்கள் ?


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ