உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் சர்வதேச போதை கடத்தல் மன்னன் கைது!

பஞ்சாபில் சர்வதேச போதை கடத்தல் மன்னன் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் செஹனாஷ் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.அமெரிக்காவின் எப்.பி.ஐ., போலீசாரால் தேடப்படும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் செஹனாஷ் சிங், கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு கொகைன் என்ற போதைப் பொருள் கடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளான். கடந்த மாதம் 26ம் தேதி, அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த செஹனாஷின் கூட்டாளிகளான, அம்ரித் பால் சிங், தக்திர் சிங், சர்ப்சித் சிங், பெர்னான்டோ வல்லதரேஸ் ஆகிய 4 பேரை அமெரிக்கா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 391 கிலோ மெத்தம்பெட்டமைனும், 109 கிலோ கொகைன் மற்றும் 4 ஆயுதங்களை அவர்களின் வீடுகளில் பறிமுதல் செய்தனர். இந்த சூழலில் கடத்தல் மன்னன் செஹனாஷ் சிங் இந்தியாவுக்கு தப்பியோடி வந்து, தலைமறைவாகினான்.அவன் இருப்பிடம் பற்றி தகவல் கிடைத்த பஞ்சாப் மாநில போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடந்து, அவனிடம் விசாரித்து வருகின்றனர். அவன் மீது பல்வேறு நாடுகளில் வழக்குகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
மார் 10, 2025 20:29

போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் பெங்களூருவில் கைது. இந்தியா முழுவதிலும் போதைப்பொருட்கள் நடமாட்டம் மிக மிக அதிகரித்துவிட்டது. பிடிபட்டவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைத்தால் இந்த நடமாட்டம் குறையும். தண்டனை தாமதமாவதால்தான் இந்த போதைப்பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரிக்கிறது.


ராமகிருஷ்ணன்
மார் 10, 2025 14:26

ஜாபர்சாதிக்வோட கூட்டாளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். பண பறிமாற்றம் போன் பேச்சுகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியுது.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 10, 2025 14:02

அதென்ன பஞ்சாபில் மட்டும் போதையை வளர்க்குறவங்க கைது எல்லாம் நடக்குது ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை