உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலவச மின்சார வாகன சார்ஜிங் வசதி அறிமுகம்

இலவச மின்சார வாகன சார்ஜிங் வசதி அறிமுகம்

பெங்களூரு: 'ஸ்டேட்டிக்' எனும் நிறுவனம், கர்நாடகாவில் உள்ள அதன் 400 சார்ஜிங் நிலையங்களில், மின்சார வாகனங்களை இலவசமாக சார்ஜ் செய்யலாம் என அறிவித்துள்ளது.இந்தியாவில் 7,000க்கும் அதிகமான மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை ஸ்டேட்டிக் நிறுவனம், செயல்படுத்தி வருகிறது. மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் பெரும்பாலானோர், வீட்டிலேயே தங்கள் வாகனங்களை சார்ஜ் செய்கின்றனர். நீண்ட துார பயணத்தின் போது, அவர்கள் பொதுவெளியில் சார்ஜ் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, இலவசமாக சார்ஜ் செய்யும் வசதியை, இந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.அதன்படி, கர்நாடகாவில் உள்ள 400 சார்ஜிங் நிலையங்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் மின்சார வாகனங்களை இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். 'டாடா நெக்ஸான், டியாகோ' போன்ற அனைத்து வகை மின்சார வாகனங்களையும், இங்கு சார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி, தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், டாக்ஸி போன்ற பொது போக்குவரத்துகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலவச சார்ஜிங் சேவையை பெற, பயனர்கள் ஸ்டாடிக் செயலியை பதிவிறக்கம் செய்து, தங்கள் வாகன விபரங்களை சமர்பித்த பின், சார்ஜிங் செயல்முறையை துவக்கலாம். இந்த செயலியில், மறைமுக கட்டணங்கள் எதுவும் இல்லை எனவும், பயனர்கள் தங்கள் மின்சார வாகனங்களை, எந்த கட்டணமும் இல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம் எனவும், நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி