உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி பாஸ்போர்ட் ஈரான் வாலிபர் கைது

போலி பாஸ்போர்ட் ஈரான் வாலிபர் கைது

மஹராஜ்கஞ்ச்:போலி பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றைக் காட்டி நேபாளம் செல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.உ.பி., மாநிலம், மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நேபாள எல்லையில் அமைந்துள்ளது சோனாலி. இங்கு நேற்று முன் தினம் இரவு, நேபாள நாட்டுக்குள் செல்வதற்காக வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த யாகூப் வர்தன், 39 என்பவர் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவருடைய பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவை போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.மேலும், மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கும் யாகூப் கைது செய்யப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ