உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூண்டு காய்கறியா...? நறுமணப் பொருளா...? இப்படியொரு அக்கப்போரா...? ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை பாருங்க!

பூண்டு காய்கறியா...? நறுமணப் பொருளா...? இப்படியொரு அக்கப்போரா...? ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை பாருங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்தூர்: பூண்டு தொடர்பாக விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே 9 ஆண்டு காலமாக நிலவி வந்த குழப்பத்திற்கு ஐகோர்ட் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சட்டப்போராட்டம்

இந்திய குடும்பங்களின் சமையலில் எப்போதுமே பூண்டுக்கு முக்கிய இடமுண்டு. மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டுக்கு, மார்க்கெட்டில் எப்போதும் டிமாண்ட் இருக்கும். இந்த பூண்டு விற்பனை தொடர்பாக, மத்திய பிரதேசத்தில் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் 9 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடந்து வந்தது தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குழப்பம்

அதாவது, பூண்டு காய்கறி வகையைச் சேர்ந்ததா? அல்லது நறுமணப் பொருட்களின் வகையைச் சேர்ந்ததா? என்பதுதான் பிரச்னை. கடந்த 2015ம் ஆண்டு சில விவசாயிகள் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, பூண்டு காய்கறி வகையில் சேர்க்கப்பட்டது. வேளாண் துறையின் இந்த முடிவை எதிர்த்து உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டுகளுக்கான கமிஷன் ஏஜெண்ட் சங்கம் 2016ல் இந்தூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

மேல்முறையீடு

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், 2017ல் ஏஜெண்டுகள் சங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, விவசாயிகளுக்கு அதிர்ச்சியளித்தது. பின்னர், இந்த தீர்ப்பை எதிர்த்து முகேஷ் சோமானி என்பவர் மேல்முறையீடு செய்தார்.

ம.பி.,க்கு மட்டும்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காய்கறி பட்டியலிலேயே பூண்டு தொடரும் என்றும், விவசாயிகள் எந்தவொரு கமிஷனும் கொடுக்காமல், நேரடியாக மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யலாம் என்று தீர்ப்பை வழங்கினார். மேலும், இந்த உத்தரவு மத்திய பிரதேசத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்ப்பது ஏன்?

பூண்டு, காய்கறி வகைகளில் சேர்க்கப்பட்டால், நேரடியாக மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு எடுத்து செல்லலாம். ஆனால், நறுமணப் பொருட்களின் கீழ் இருந்தால், அதற்குரிய சங்கங்களின் வாயிலாகவே விற்பனை செய்ய முடியும் என்பது விதிமுறையாகும். இதுவே பிரச்னைக்கு காரணமாக அமைந்து விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R S BALA
ஆக 14, 2024 19:24

இதுக்கு ஒன்பது ஆண்டா! என்ன ஒரு புத்திசாலித்தனம்...


subramanian
ஆக 14, 2024 15:15

இடைத்தரகர்கள் எப்போதும் லாபம் சம்பாதித்து கொழுத்தவர்கள். இவர்கள் தான் நல்ல விவசாய சட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்த பாவிகள்.


Swaminathan L
ஆக 14, 2024 13:55

யாராவது, 2017ல் பூண்டு நறுமணப் பொருள் என்று தீர்ப்பளித்த இந்தூர் நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு குட்டி செண்ட் பாட்டில் அனுப்பி வைக்கலாம். நறுமணம் என்றால் எப்படி என்று தெரிந்து கொள்ள ஏதுவாக.


Ram pollachi
ஆக 14, 2024 13:26

கிராமங்களில் பூண்டை வெள்ள வெங்காயம் என்றே அழைப்பார்கள்...


Iniyan
ஆக 14, 2024 13:22

அயோக்கியர்கள்


ஆரூர் ரங்
ஆக 14, 2024 12:36

இது போல முன்பு அமெரிக்க நீதிமன்றத்தில் தக்காளி ஒரு பழமா அல்லது காய்கறியா என வழக்கு நடைபெற்றது. தீர்ப்பு அது காய்கறி வகைதான் என்றது.


Ramesh Sargam
ஆக 14, 2024 12:08

பூண்டு காய்கறி வகையில்தான் சேர்க்கப்படவேண்டும். முதலில் இந்த நடுத்தரகர்களை ஒழித்துக்கட்ட நீதிமன்றம் ஒரு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களால்தான் இன்று எல்லா உணவுப்பொருட்களின் விலைகள் அதிகமா இருக்குது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி