உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் பிரதமர் வேட்பாளரா?: ஸ்மிருதி கேட்கிறார்

ராகுல் பிரதமர் வேட்பாளரா?: ஸ்மிருதி கேட்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதம் நடத்த, அழைப்பு விடுத்த ராகுலுக்கு, நீங்கள் என்ன பிரதமர் வேட்பாளரா? என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பி உள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன், பிரதமர் மோடி பொது விவாதத்திற்கு தயாரா? என ராகுல் கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில், அமேதி தொகுதி பா.ஜ., வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி கூறியதாவது: முதலாவதாக, தனது கோட்டையில் இருக்கும் சாதாரண பா.ஜ., தொண்டரை கூட, எதிர்த்துப் போட்டியிடும் தைரியம் இல்லாதவர் ராகுல். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6huz6m52&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும். நான் கேட்க விரும்புகிறேன். ராகுல் என்ன பிரதமர் வேட்பாளரா?. இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் இருந்தாரா?. இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார். கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி எதிர்த்து போட்டியிட்ட ராகுல் தோல்வி அடைந்தார். இந்தாண்டு, அவர் ஸ்மிருதி இரானியை எதிர்த்து போட்டியிடாமல் , ரேபரேலி தொகுதியில் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

iyyapan valuthiyur
மே 13, 2024 09:04

சரியாக சொன்னீர்கள்


DARMHAR/ D.M.Reddy
மே 13, 2024 00:32

ராகுல் ஒரு குட்டிச்சுவர் பக்கத்தில் நிற்கும் ஒரு நாற்கால் ஐந்து போன்றவர் அவர் இந்தியாவின் பிரதமராக ஆசைப்படுவதா?


ellar
மே 12, 2024 19:02

திரு ராகுல் காந்தி அவர்கள் முதலில் அவருடைய வயதிற்கும் அனுபவத்திற்கும் தகுதிக்கும் ஏற்றவர்களுடன் விவாதித்து அதற்குப்பின் படிப்படியாக முன்னேறி விவேகம்


என்றும் இந்தியன்
மே 12, 2024 18:24

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டதை பார்த்து


M S RAGHUNATHAN
மே 12, 2024 16:54

ராகுல் உங்கள் பெயருடன் " காந்தி" என்ற surname எப்படி ஒட்டிக் கொண்டது? ராகுல்: நான் காந்தியின் கொள்ளுப்பேரன்


Suppan
மே 12, 2024 15:58

ராகுல் பாகிஸ்தானின் பிரதமர் ஆக முயற்சி செய்யலாம்


Selvakumar Krishna
மே 12, 2024 14:15

விவாதத்துக்கு வர வேண்டியதுதானே?


kannan
மே 12, 2024 12:48

பயத்தை மறைக்க என்னவெல்லாம் பேச வேண்டுயிருக்கிறது


ஆரூர் ரங்
மே 12, 2024 13:35

மன்மோகனின் பயபக்தியை விட அதிக பயம் வேறு யாருக்குமே இல்லை.


குமரி குருவி
மே 12, 2024 12:42

காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை கொடுத்தால் இன்னுமொரு அடிமை வாழ்வு வாழ வேண்டிய நிலை உருவாகும்


Balasubramanian
மே 12, 2024 12:29

பிறந்தது முதல் அவர்தான் பிரதமர் என்று சொல்லி வளர்த்த ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி! இப்போது இல்லை என்றால் ஏமாற்றம் அடைய மாட்டாரா? நாட்டை அடகு வைத்தேனும் (அவர்கள் அள்ளி விடும் வாக்குறுதிகளை பார்த்தால் அவ்வாறு தோன்றுகிறது) பிரதமர் நாற்காலியை பிடிக்காமல் விட மாட்டார்! தேர்தலில் தோற்றாலும் ராஜ்ய சபா வழியில் பிரதமர் ஆக தயார்! எதிர் கட்சிகள் ஜெயிக்க வேணுமே!!


மேலும் செய்திகள்





புதிய வீடியோ