உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.சி.சி.,யின் தலைவராக ஜெய் ஷா தேர்வு

ஐ.சி.சி.,யின் தலைவராக ஜெய் ஷா தேர்வு

புதுடில்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக உள்ள நியூசிலாந்தைச் சேர்ந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிவடைகிறது. அவர் 3வது முறையாக போட்டியிடமாட்டேன் என அறிவித்துள்ளார். இதனால் ஐ.சி.சி.,தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். வரும் டிசம்பர் 1 முதல் ஆரம்பம் ஆகும்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக உள்ள ஜெய் ஷா, ஐ.சிசி தலைவர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார். இன்று வெளியான அறிவிப்பில் ஐ.சி.சி., தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வானதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் வரும் டிச.01 ம்தேதி பதவியேற்க உள்ளார். இதன் மூலம் 35 வயதில், அவர் ஐ.சி.சி., வரலாற்றில் இளம் வயது தலைவராக ஜெய்ஷா தேர்வு பெற்றார்.முன்னதாக இப்பதவியில் ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன் மற்றும் மனோகர் ஆகியோர் ஐ.சி.சி.,யின் தலைவராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஆரூர் ரங்
ஆக 28, 2024 11:24

காரணம் சிம்பிள். உலக கிரிக்கெட் வருமானத்தில் எண்பது சதவீதம் இந்திய கிரிக்கெட் வெறித்தன ரசிகர்களால் கிடைப்பதுதான். இந்தியா இடம்பெறாத போட்டிகளில் லாபம் கிடைப்பதில்லை. எனவே மற்ற நாடுகள் விட்டுக் கொடுத்துவிடுகின்றன. கிரிகெட் மோகம் ஒழிந்தால்தான் இந்தியா உருப்படும்.


Vijay D Ratnam
ஆக 27, 2024 23:54

சர்வதேச க்ரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா. பல லட்சம் கோடி டாலர் புழங்கும் இடம். பொக்லைன் வச்சி அள்ளினாலும் மாளாது. எந்த தகுதியும் இல்லாத ஒரு அரசியல் தலைவர் வாரிசு. நாறடிக்காம விட்டுடுவாய்ங்களா.


அரசு
ஆக 27, 2024 23:11

கிரிக்கெட் மட்டை பிடிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் ஐசிசி தலைவர். பணம், அரசியல் பலம் இருந்தால் எந்த பதவிக்கும் வரலாம் என்பது கண்கூடாக தெரிகிறது.


ஆரூர் ரங்
ஆக 28, 2024 11:20

ஜெய்ஷா குஜராத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர். ஆனால் முன்பு ஐ.சி.சி, பிசிசிஐ தலைவர்களாக இருந்த பாவர் , சீனிவாசன். முத்தையா வேர்ல்டு கப், T20 வீரர்களா?


Sundar
ஆக 27, 2024 22:36

நீ ஜெயி ஷா


பாமரன்
ஆக 27, 2024 22:04

இந்தியாவுக்காக கபடி கில்லி பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளில் தெறமை காட்டியதால் இந்திய கிரிக்கெட் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளை பர்ச்சேஸ் செய்து இந்தியா ஒலக கோப்பையை வெல்ல உதவினார். அதேபோல் இப்போ ஒலக கிரிக்கெட் தலீவராகி சந்திர மண்டலத்தில் ஐஸ் பாய் விளையாட்டில் ஒலகமே சாதனை புரிய தெறமையை காட்ட வாழ்த்துக்கள்...


தாமரை மலர்கிறது
ஆக 27, 2024 21:09

ஜெய் ஷா மிக திறமையாக செயல்பட்டு, தொடர்ந்து இந்தியாவை ஜெயிக்க வைத்ததன் மூலமாக பெருவாரியான ஆதரவை பெற்று தேர்வு பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். தகுதி படைத்தவர்கள் தொடர்ந்து ஜெயிப்பார்கள். வயித்தெரிச்சல் அடைபவர்கள் குறை சொல்வார்கள்.


பாமரன்
ஆக 27, 2024 22:06

அட ... இந்த பீஸ் சொல்றதை பார்த்தா ஆட்டக்காரங்க யாரும் டீம் கெலிக்க காரணம் இல்லை போல...?? அதிகம் பகோடா சாப்பிடாமல் படிக்க சொன்னால் எங்க கேக்கறாய்ங்க... தேவுடா...


Gopi Panneerselvam
ஆக 27, 2024 20:44

சர்வதேச கிரிக்கெட்டின் அழிவு ஆரம்பம்


Santhakumar Srinivasalu
ஆக 27, 2024 20:43

இந்தியர்கள் உலகை ஆள தயாராகி வருகிறார்கள்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை