உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கச்சத்தீவு விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

கச்சத்தீவு விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கச்சத்தீவு விவகாரம் குறித்து கடந்தகால வரலாற்றை சுட்டிக்காட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 1974ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய மீனவர்களின் உரிமைகள் தொடர்பாக 1974ம் ஆண்டில் பார்லிமென்டில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த 1974ல் ஒப்பந்தம் கையெழுத்தான போது இந்திய மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 1976ல் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தான மற்றொரு ஒப்பந்தத்தில் மீனவர்களின் உரிமை மறுக்கப்பட்டது.

நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விளக்கம்

கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு நான் 21 முறை பதில் கடிதம் அனுப்பி உள்ளேன். தங்களுக்கு பொறுப்பு இல்லை என்கிற வகையில் திமுக, காங்கிரசும் பேசுகிறது. கச்சத்தீவு தொடர்பான உண்மைகளை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைத்தவர்களை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளவே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

6,184 இந்திய மீனவர்கள் கைது

கச்சத்தீவுக்கு உரிமை கோரும் ஆவணங்களை ராமநாதபுரம் ராஜா வைத்திருந்தார். பார்லிமென்டில் கடந்த 5 ஆண்டுகளில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பலமுறை விவாதித்துள்ளோம். கடந்த 20 ஆண்டுகளில் இந்திய மீனவர்கள் 6,184 பேரை இலங்கை அரசு இதுவரை கைது செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஏப் 02, 2024 06:21

சரி அவர்கள் கடந்த காலத்தில் தவறு செய்தார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட தமிழக மக்கள் மீது பாசம் கொண்ட உங்கள் பத்தாண்டு ஆட்சியில் அதை சரி செய்து மீட்டெடுக்க நீங்கள் ஒன்றுமே செய்யவில்லையே!


K.n. Dhasarathan
ஏப் 01, 2024 17:46

கச்ச தீவு என்ன கலைஞர் சொத்தா ?, மத்திய அரசின் சொத்து, அவர் வாங்கவோ விற்கவோ முடியாது, இன்திரா அம்மையார் தான் ஒப்பந்தம் போட்டு கொடுத்தார் ? சும்மா அண்ணாமலை மாதிரி பேசாதீர்கள், ஒப்பந்தத்தில் என்ன இருந்தது, வெளியிடுங்கள் பார்க்கலாம் எல்லோரும் படிக்கலாம், தெரிஞ்சுக்கலாம், ஆனால் ஒன்று இப்போது ஏன் பிஜேபிஇதை கையில் எடுக்கிறது ? தமிழக மீனவர்களை கைது செய்து வைத்துள்ளார்கள், அதை மீட்க துப்பில்லை, வரலாறு தெரியாமல் பேசுகிறார்கள், வருடங்களாக பிஜேபிஎன்ன செய்தது ? இப்போது ஏன் பொங்குகிறது ?


Raj Kamal
ஏப் 01, 2024 16:11

கடந்த பத்து வருடங்களாக பிஜேபி இதில் ஆற்றிய பணிகள் என்ன? இப்போது, பத்து வருடங்களுக்கு பிறகு இன்னும் அவர்களையே குறை சொல்வது எப்படி சரியாகும்?


Vijay
ஏப் 01, 2024 20:59

If Sri Lanka agrees with India to give Kachathiev back to India, then only it is possible, otherwise it is not, because it is what it is Learn the facts before posting anything


PR Makudeswaran
ஏப் 01, 2024 15:25

பி ஜெ பி சொல்வது பொய் என்றால் மத்திய அரசு மீது வழக்குப் போட்டு நிரூபிக்க வேண்டியதுதானே ஏன் பொம்மலாட்டம் தி மு க அனுதாபிகள் உண்மையை உணர வேண்டும் சும்மா காவடி தூக்கி நாடும் நாசமாகி போனது நாங்களும் போனோம்


DUBAI- Kovai Kalyana Raman
ஏப் 01, 2024 14:51

நோட் பண்ணுங்க தமிழ் மக்களே, இப்போ தான், பிஜேபி அரசாங்கம் தான், இந்தியா மீனவர்கள் னு சொல்லுது, வெளியுறவு துறை மந்திரி கூட, இந்தியா மீனவர்கள் னு சொல்லி இருக்கார், களவாணி காங்கிரஸ் அரசாங்கத்தில், தமிழ் மீனவர்கல ஸ்ரீலங்கா ராணுவம் கைது பண்ணி இருக்கு னு சொல்லுவாங்க தமிழ் மீனவர்களை புடிசிட்டு போன, இந்தியா கு ஒன்னும் இல்லை என்பது போல பேசுவான் சுட்டு கொளுவான்கள் , இப்போ சுட முடியுமா, பிஜேபி அரசாங்கம் மிரட்டி வச்சு இருக்கு , சுண்டைக்காய் நாட்டை


vijay
ஏப் 01, 2024 12:42

sucessfully


ஆரூர் ரங்
ஏப் 01, 2024 12:21

உக்ரேனுக்கு பஸ் அனுப்பி மாணவர்களை மீட்ட திமுக அருகிலுள்ள இலங்கைக்கும் பஸ் அனுப்பி மீனவர்களை மீட்க முயற்சிக்கலாமே ஒரு கட்டுமரமாவது அனுப்ப முடியாதா?


rameshkumar natarajan
ஏப் 01, 2024 12:05

Ok We agree Congress did this blunder What you people were doing all these years All of suddern you all woke up from deep sleep?


Sampath Kumar
ஏப் 01, 2024 11:45

ராமநாதபுரம் ராஜாகிட்ட இருந்ததை அவரிடம் கேக்காமலே தாரைவார்க்க இந்திய அரசுக்கு என்ன உரிமை உள்ளது? ஏடுதான் கவிழ்த்தேன் என்று செயல்பட வேண்டிய நிர்பந்தம் ஏன் வந்தது / இதனை விளக்குவார்களா சம்பந்தம்பட்டா அதிகாரிகள் சும்மா தேர்தலுக்கா என்று உளறக்கூடாது உண்மையை உரக்க sollavaendum


செந்தமிழ் கார்த்திக்
ஏப் 01, 2024 11:10

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்களை பற்றி பேசி பேசியே மக்களை ஏமாற்றுவார்கள் இந்த கார்ப்பரேட் ஊழல் பாஜக கட்சியினர்? உண்மையிலயே அக்கறை இருந்திருந்தால் கடந்த பாஜக பத்து ஆண்டுகளில் கட்ச தீவை இலங்கையிடம் இருந்து இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டாமா ? சிந்தியுங்கள்


Ganapathy Subramanian
ஏப் 01, 2024 11:51

சரியான கேள்வி ஆனால் இதனை வருடமாக ஏன் உண்மையை மறைத்து பேசுகிறீர்கள் என்று என்றைக்கு விடியா கட்சியினரை பார்த்து கேட்கப்போகிறீர்கள் அந்த தைரியம் வருமா உங்களுக்கு? இல்லை வீட்டிற்கு ஆட்டோ வரும் என்று வாய் மூடி மௌனியாக இருந்து விடுவீர்களா?


மேலும் செய்திகள்











புதிய வீடியோ