உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவில்களின் ஊராக திகழும் காகினாலே

கோவில்களின் ஊராக திகழும் காகினாலே

'கோவில் இல்லாத ஊரில் குடியேற வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று பழமொழி உள்ளது. இதனால் கோவில்கள் அதிகம் இருக்கும் ஊரில் வசிப்பதற்கு மக்கள் அதிகம் விரும்புவர்.கர்நாடகாவின் வட மாவட்டங்களில் ஒரே ஊரில் அதிகமான கோவில்கள் அமைந்துள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது காகினாலே கிராமம்.ஹாவேரி பேடகி தாலுகாவில் உள்ளது காகினாலே கிராமம். இந்த கிராமத்தில் ஆதிகேஸ்வரா, கலகட்டேஸ்வரர், லட்சுமி, நரசிம்மா, சங்கமேஸ்வரா, சோமேஸ்வரா, வீரபத்ரா என ஏழு கோவில்கள் உள்ளன.இந்த ஏழு கோவில்களும் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவில்களாகும். கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இந்த கிராமத்திற்கு வரும் சுற்றுலா பயணியர், கண்டிப்பாக ஏழு கோவில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்வர்.கோவில்களின் கட்டட கலையை கண்டு பிரமிப்பு அடைவர். கோவில்களை பற்றிய வரலாறுகளை அர்ச்சகர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வர். பெங்களூரில் இருந்து காகினாலே 330 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. பஸ், ரயில் வசதி உள்ளது.--- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை