மேலும் செய்திகள்
திருவனந்தபுரம் டிஐஜி அஜீதா பேகத்திற்கு முதல்வர் விருது
3 hour(s) ago | 1
தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
5 hour(s) ago | 4
மீரட்:இரண்டு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றவர், பெற்றோர் துரத்தியதால், வாய்க்காலில் சிறுமியை வீசி விட்டு தப்பியவர் கைது செய்யப்பட்டார். சிறுமி சடலம் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது.உ.பி., மாநிலம் மீரட் அருகே சதர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோயிஷ்,20. நேற்று முன் தினம், வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமியை கடத்திச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை தூக்கிச் சென்ற மோயிஷ், அவளை பலாத்காரம் செய்ய முயன்றார். சிறுமி அலறினாள்.இதற்கிடையில், சிறுமியின் பெற்றோர் மகளைக் காணாமல் தேடி வந்தனர். அப்போது அலறல் கேட்டு வந்தபோது, சிறுமியைத் தூக்கிக் கொண்டு ஓடிய மோயிஷ், வழியில் இருந்த கால்வாயில் சிறுமியை தூக்கி வீசி விட்டு தப்பினார்.தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமி உடலை நேற்று காலை மீட்டனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மோயிஷை கைது செய்தனர்.
3 hour(s) ago | 1
5 hour(s) ago | 4