உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க கர்நாடக பா.ஜ., தலைவர்கள்  டில்லி பயணம்

மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க கர்நாடக பா.ஜ., தலைவர்கள்  டில்லி பயணம்

நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக, கர்நாடக பா.ஜ., தலைவர்கள், நேற்று டில்லி சென்றனர்.லோக்சபா தேர்தலில் பா.ஜ., தேசிய தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த கூட்டணியின் பார்லிமென்ட் குழுத் தலைவராக நரேந்திர மோடி நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார்.ஜனாதிபதி மாளிகையில், இன்று இரவு நடக்கும் விழாவில், மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக, நாடு முழுதும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கர்நாடக தலைவர்களுக்கும் அழைப்பு வந்தது.இந்நிலையில், முன்னாள் முதல்வரும், பா.ஜ., பார்லிமென்ட் குழு உறுப்பினருமான எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திரா, அக்கட்சியின் எம்.பி.,க்கள், மூத்த எம்.எல்.ஏ.,க்கள், நேற்று பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம், டில்லி சென்றனர்.கர்நாடக பவன் மற்றும் தனியார் ஹோட்டல்களில் தங்கி உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்ததால், அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். அரசியல் நிலவரம் குறித்து தீவிரமாக பேசிக் கொண்டனர். இன்று நடக்கும் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு, நாளை பெங்களூரு திரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை