உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யமுனை நீரில் நச்சு தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்தார் கெஜ்ரிவால்

யமுனை நீரில் நச்சு தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்தார் கெஜ்ரிவால்

புதுடில்லி:யமுனை நதிநீரில் ஹரியானா மாநிலத்தில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பது குறித்த தன் பதிலை, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று தாக்கல் செய்தார்.டில்லி சட்டசபைத் தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கிறது. பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், யமுனை நதி நீரில் ஹரியானா மாநிலத்தில் தொழிற்சாலைக் கழிவுகளை கலப்பதாகவும், அதனால், டில்லி மக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.கெஜ்ரிவாலின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பா.ஜ., இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தது. அந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், இந்த விவகாரத்தில் பதில் அளிக்குமாறு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தன் பதிலை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று காலை தாக்கல் செய்தார். டில்லி முதல்வர் ஆதிஷி சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் , ராஜ்யசபா எம்பி., சஞ்சய் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது:யமுனை நதி நீரில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது குறித்து, விரிவான பதிலை அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார். மேலும், நச்சு நிறைந்த நீரை டில்லிக்கு அனுப்புவதில் பா.ஜ.,வின் சதி குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கினார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, நிருபர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மக்கள் நலனுக்காக குரல் கொடுத்தால், ஆம் ஆத்மி கட்சியை குறிவைத்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்புகிறது. தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், அதிக அளவு அம்மோனியா கலந்த நீரை யமுனையில் திறந்து விடுகின்றனர். இது, அரசியல் சதி என்று கெஜ்ரிவால் கூறினார். ஜன., 26 மற்றும் -27 ஆகிய தேதிகளில் யமுனை நீரில் 7 பி.பி.எம்., ஆக இருந்த அமோனியா அளவு ஆம் ஆத்மியின் எதிர்ப்புக்குப் பின், இப்போது 2.1 பி.பி.எம்., ஆகக் குறைந்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் தன் நடவடிக்கைகளால் அரசியல் செய்கிறார்,”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி