உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால், கவிதா காவல் நீட்டிப்பு

கெஜ்ரிவால், கவிதா காவல் நீட்டிப்பு

புதுடில்லி:டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி மூத்த தலைவர் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவலை செப். 2 வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.குற்றம் சாட்டப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா ஆகிய இருவரும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர். செப்.2 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஆம்னால், சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்கில் ஜாமின் கிடைக்காததால் கெஜ்ரிவால் சிறையில் உள்ளார். அதிலும் விரைவில் ஜாமின் கிடைக்கும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதே வழக்கில் 17 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கடந்த வெள்ளியன்று ஜாமினில் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ