உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் எடை 2 கிலோ குறைவு: திஹார் சிறை அதிகாரிகள் விளக்கம்

கெஜ்ரிவால் எடை 2 கிலோ குறைவு: திஹார் சிறை அதிகாரிகள் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் 8.5 கிலோ எடை குறைந்துள்ளதாகவும், அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து விட்டதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது.இந்நிலையில், திஹார் சிறை அதிகாரிகள் கூறியதாவது:ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சிறை நிர்வாகம் சார்பில், டில்லி அரசின் உள்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்புஇது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.அவர் இதுவரை, 2 கிலோ மட்டுமே எடை குறைந்துள்ளார். அவரது எடை, 8.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறுவது உண்மை அல்ல.கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்த உணவுதான் சிறையில் வழங்கப்படுகிறது. ஆனால் அவர், ஜூன் 3ம் தேதி முதல் அதில் பாதி உணவை திருப்பி அனுப்பி விடுகிறார்.அவரது மனைவி சுனிதா, மருத்துவக் குழுவினரிடம் தினமும் ஆலோசனை நடத்துகிறார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.நீரிழிவு நோய்இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங் கூறியதாவது:கெஜ்ரிவால் உடல் எடை குறைந்து இருப்பதை, திஹார் சிறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். கெஜ்ரிவாலை சிறையிலேயே நீண்ட மாதங்களுக்கு அடைத்து வைத்து, அவரது உடல்நிலையை சீர்குலைக்க பா.ஜ., சதி செய்கிறது.நீரிழிவு குறைபாடுள்ள கெஜ்ரிவாலுக்கு தேவையான மருத்துவ வசதி சிறையில் கிடைக்கவில்லை. அவர் தூங்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால் கோமா நிலைக்குக் கூட செல்லலாம் அல்லது மூளைச்சாவு அடையலாம். அதைத்தான் பா.ஜ., எதிர்பார்க்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SP
ஜூலை 16, 2024 19:37

உடல்நிலையை காரணம்காட்டி சிறையில் வைத்திருப்பது தவறு என்று சொல்லவருகிறார்களா?


ஆரூர் ரங்
ஜூலை 16, 2024 18:40

மூளையின் எடை குறைந்திருக்கும்.


Azar Mufeen
ஜூலை 16, 2024 18:29

வீராங்கனைகளின் மேல் பாலியல் தொல்லை கொடுத்தவர் வெளியே இருப்பது போல் இவரையும் வெளியே செல்ல அனுமதிக்கலாமே


கூமூட்டை
ஜூலை 16, 2024 12:20

கட்சி சார்பாக எல்லாம் செளகரியம் செய்து தரும் சட்டம். ஒரு ரூபாய் பிட் பாக்கெட் அடித்தால் தரும அடி. வாழ்க அரசியல் ஊழல் வாதிதக்காளி


Sampath Kumar
ஜூலை 16, 2024 09:40

ஏடை குறைவு உடல் நல்ல அறிவு போன்ற கார்னர் எல்லாம் ஏற்புடையது அல்ல நம்ம நாடு சட்டம் தான் நோய்வாய் பட்டு உள்ளது தேவை அவசர சிகிச்சை சட்டத்துக்கு தான்


Swaminathan L
ஜூலை 16, 2024 09:26

அப்பப்பா தேர்தலுக்கு முன் சாப்பிடக் கூடாததையெல்லாம் வீட்டிலிருந்து வரவழைத்துச் சாப்பிட்டு இரத்தச் சர்க்கரை அளவு அதிகம், இன்சுலின் தரவில்லை என்று கூப்பாடு... இப்போது, பாதி உணவைத் திருப்பி அனுப்பி சர்க்கரை அளவு குறைந்து விட்டதாய் எதிர்மறை ட்ராமா உலகத்தில் டைப் 1, டைப் 2 டயாபடிக்ஸ் இருக்கிறது .


Dharmavaan
ஜூலை 16, 2024 07:14

இதுபோன்ற மற்ற குற்றவாளிகளைவிட எந்த விதத்தில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய விரோதி


Kasimani Baskaran
ஜூலை 16, 2024 05:29

சர்க்கரை நோய் இருக்கும் பொழுது, பொதுவாக அதிக எடை என்பது ஆபத்தானது. சிறை வாழ்க்கையால் உடல் எடை குறைந்ததில் நல்லதுதான் நடந்திருக்கிறது.


இவன்
ஜூலை 16, 2024 04:48

குறையட்டும் என்ன, திருடிட்டு தானே ஜெயில் ல இருக்கான் சுற்றுலா க்கு போகலேயே


N Sasikumar Yadhav
ஜூலை 16, 2024 02:03

கெஜ்ரிவாலுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கிறார்களோ அதுபோல அனைத்து கைதிகளுக்கும் செய்து கொடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்