உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் டாக்டர் கொலையில் நாடே அதிர்ந்தது: நள்ளிரவிலும் தொடருது போராட்டம்

பெண் டாக்டர் கொலையில் நாடே அதிர்ந்தது: நள்ளிரவிலும் தொடருது போராட்டம்

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி டாக்டர் கூட்டு பலாத்காரத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கேட்டும், டில்லி உள்பட நாடு முழுதும் பல்வேறு நகரங்களில் நள்ளிரவை தாண்டியுமு் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கடந்த 9ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுதும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ., கையில் எடுத்து விசாரணையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் டில்லி, கோல்கட்டா, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள், பொதுமக்கள், நள்ளிரவில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், பதாகைகள் மற்றும் தீப்பந்தம் ஏந்தியும் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் பயிற்சி டாக்டருக்கு நீதி கேட்டும், மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி வருகின்றனர்.

விசாரணை துவக்கம் @ @சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையைதுவக்கினர். பெண் டாக்டர் உயிரிழந்த மருத்துவ மனையில், அவர் உடல் இருந்த கூட்ட அரங்கை ஆய்வு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், அவருடன் பணியாற்றிய டாக்டர்களிடம் நேற்று விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடமும் விசாரணை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ram pollachi
ஆக 15, 2024 08:07

இதுபோல் தினமும் நடந்துகொண்டே இருக்கிறது... என்ன செய்ய...


VENKATASUBRAMANIAN
ஆக 15, 2024 07:03

இதை பற்றி ஒருவரும் எந்த ஆர்எஸ்பாரதி ஊடகமும் மூச்சு விடாது. இதேபோல் உபி பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்திருந்தால் ஒரு வாரம் விவாதம் செய்வார்கள். என்ன கேவலமான அடிமைகள். தமிழ்நாட்டில் டாக்டர் சங்கங்கள் என்ன செய்கின்றனர். டிவியில் வாய் கிழிய பேசும் சாந்தி போன்ற கம்யூனிஸ்ட் டாக்டர்கள் வாயி கொழுக்ககட்டை வைத்துள்ளார்கள் போலும்.


Nandakumar Naidu.
ஆக 15, 2024 07:01

மாமதாவை நாட்டை விட்டு விரட்டுங்கள், அப்போது தான் மேற்கு வங்காளம் உருப்படும். பெண்கள் மற்றும் ஹிந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.


Barakat Ali
ஆக 15, 2024 06:41

குற்றங்களைக் குறைக்க உதவாத சட்டங்களைத் தூக்கி தூர வீசிவிட்டு ஷரியத் அமல்படுத்துங்கள் ....


கண்ணன்
ஆக 15, 2024 06:31

இந்தப் புள்ளி வைத்த கூட்டணிக் கட்சிகளின் வாயில் என்ன புளியோதரையா?


Kasimani Baskaran
ஆக 15, 2024 05:28

மொத்த சமூகத்தையும் குறை கூறுவதை விட ஆபத்தை புரியாமல் நடந்து கொண்டவர்களை நினைக்கையில் ஒருவகை வெறுப்புதான் வருகிறது.


Nathan
ஆக 15, 2024 04:38

Finally this news in dinamalar ,


sankaranarayanan
ஆக 15, 2024 01:45

பங்களாதேஷில் இடஒதுக்கிவிடு அடக்குமுறையினால் அரசு கவிஷந்தது பிதாமர் நாட்டைவிட்டே ஓடும் அவலநிலைமை உண்டாயிற்று இப்போது மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் கொலை இந்திய பெருநாட்டையே அதிரவைத்துள்ளது நள்ளிரவிலும் போராட்டம் கட்டுக்கடங்கால் சென்று கொண்டிருக்கின்றது மமதையின் அடக்குமுறைக்கும் ஒரு முற்றுப்புள்ளி விரைவிலே வந்துவிடும் அவர் எங்கு ஓடுவாரோ தெரியவில்லை


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி