உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டா சம்பவம்; மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

கோல்கட்டா சம்பவம்; மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வழக்கமான நடைமுறைகளை எதுவும் பின்பற்றாமல், கோல்கட்டா டாக்டரின் உடலை பிரேத பரிசோதனை செய்தது ஏன்? என்று மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி., கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் தற்போதும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அறிக்கை

இந்த கொலை விவகாரத்தில் மேற்கு வங்க அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த சூழலில், இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், பெண் டாக்டர் கொலை வழக்கில் சி.பி.ஐ., தரப்பில் இன்று அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

சரமாரி கேள்வி

அதில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நேரம், அவரது உடலை பெற்றோரை பார்க்க விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த அறிக்கையை படித்து பார்த்த தலைமை நீதிபதி சந்திரசூட், மேற்கு வங்க அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஏன்?

வழக்கமான நடைமுறைகளை எதுவும் பின்பற்றாமல், உடலை பிரேத பரிசோதனை செய்தது ஏன்? என்று மேற்கு வங்க அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதாவது, பிரேத பரிசோதனை செய்வதற்கான ஆவணமே இல்லாமல், உடற்கூராய்வுக்கு உடலை ஒப்படைத்தது ஏன் என்றும், பெண் டாக்டர் உயிரிழந்த நேரம் குறித்து தெளிவான தகவலை கொடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சந்திர சூட் கேட்டுக் கொண்டார்.

அலட்சியம்

மேலும், சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல் துஷார் மேக்தா, தடயவியல் பரிசோதனையில் ஆதாரங்களை சேகரித்ததில் அதிருப்தி தெரிவித்ததுடன், இதன் மாதிரிகளை டில்லி எய்ம்ஸ்க்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், ரத்த மாதிரிகளை 4 டிகிரி செல்சியஸில் பாதுகாத்து வைக்கவில்லை என்றும், இதுபோன்று ஆதாரங்களை கையாள்வதில் அலட்சியம் காட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

உத்தரவு

சி.பி.ஐ.,யின் இந்த குற்றச்சாட்டுக்களால் மேற்கு வங்க அரசு மீது தலைமை நீதிபதி அதிருப்தியடைந்துள்ளார். இந்த வழக்கில் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Raghav
செப் 10, 2024 06:06

Truly said


M Ramachandran
செப் 09, 2024 19:45

உடனே மேற்க்கு வாங்க அரசு ராஜினாமா செய்ய வேண்டும். மம்தா தான் முழுவதர்க்கும் பொறுப்பு இதுபோல் பல கொலைகள் வழக்குகள் மூடி மறைக்க பட்டுள்ளது. பெண்ண என்றல் இறக்க குணம் பொதுவாக இருக்கும் தூவும் கற்பழிப்பு என்ற போனது அப்போது வீரமாக எழுந்திருக்க வில்லாய் இதை நீதி மன்றம் எடுத்தவுடன் பொங்கி எழுது. அப்பட்டமாக செய்த குற்றம் நிரூபணம் ஆக போலாகிறது என்றவுடன் எதிர்க்கட்சியை போல் தன் கட்சி மீது எதிர்ப்பதுபோனால் பாவ்லா செய்ய முனை கிறார். இந்த பெண்மணியை ராட்சசி நிச்சயம் குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். தன் ஆட்சியாய் காப்பற்றி கொள்ள எந்த அளவுக்கும் கீழே இறங்க கூடிய பெண்.


rsudarsan lic
செப் 09, 2024 16:46

ஒரு பத்து பதினைந்து நாட்களில் என்ன எதிர்பார்க்கலாம்? நாடே கேட்கும் கேள்வி இதுதான். அல்லது 10-15 மாதங்கள் ஆகுமா? அல்லது 10-15 வருடங்கள்?


C.SRIRAM
செப் 09, 2024 16:07

சரமாரி கேட்டாலும் சோமாரிகளிடமிருந்து உருப்படியான பதில்கள் வராது


Sundar R
செப் 09, 2024 16:01

கபில் சிபில் எம்.பியாக இருந்து கொண்டு மேற்கு வங்க அரசின் சார்பாக வாதாடுவது அரசியல் தலையீடு இருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது. நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்.


Sridhar
செப் 09, 2024 14:47

பொதுமக்கள் இந்த விசயத்த மறக்கறவர இப்படி கேள்வி கேட்டுட்டே பொழுதபோக்குங்க. தற்சமயம் கைவசம் இருக்கிற தடயங்கள வச்சே உங்களுக்கு என்ன நடந்திருக்குன்னு தெரிஞ்சிக்கமுடியலயா? பாக்கி விசயங்களுக்கெல்லாம் பொங்குறமாதிரி, இவ்வளவு நடந்ததுக்கப்புறமும் மத்திய அரசை பாத்து ஒரு வார்த்தை ஏன் இன்னும் அந்த மாநில அரசை டிஸ்மிஸ் செய்யலன்னு உங்களால கேக்கமுடியல. அப்புறம் நீங்கெல்லாம் இருந்து என்னய்யா பிரயோசனம்?


Nandakumar Naidu.
செப் 09, 2024 14:22

ஆமாம் திரு. சுப்ரீம் கோர்ட் அவர்களே, கடுமையான கேள்விகளை கேட்டுவிட்டு பிறகு குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்து விடுங்கள். உருப்படியாக நீங்கள் செய்யும் பணி அதானே. கபில் சிபல் போன்ற வக்கீல்களுக்கு பயந்து ஜாமீன் கொடுக்க போகிறீர்கள் அவ்வளவு தான். உழல் அரசியல் வாதிகளுக்கு நீங்கள் கொடுத்துள்ள ஜாமீன் லிஸ்ட்டை எடுத்தால் தெரியும் உங்கள் செயல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை